Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கும்கியை வாங்கியது ஸ்டூடியோ ஸ்கிரீன்

Studio Green bought kumki
இயக்குனர் லிங்குசாமி தயாரித்து வரும் படம் கும்கி. சிவாஜி பேரனும், பிரபு மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமாகிறார். லட்சுமி மேனன் ஹீரோயின். தம்பி ராமையா, டி.இமான், இயக்குனர் பிரபுசாலமன் என மைனா குழு உருவாக்கிய படம்.

காட்டுக்குள் ஒரு விவசாய கிராமத்தின் மீது பகை -கொள்ளும் அதிகார கூட்டம் ஒன்று அந்த கிராமத்தின் விளை நிலங்கள் மீது காட்டு யானைகளை ஏவிவிட்டு நாசம் செய்கிறது. இந்த காட்டு யானைகளை விரட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒரு கும்கி யானையை வரவழைக்கிறார்கள். அந்த யானையின் பாகனாக வரும் ஹீரோவுக்கும், அந்த ஊரைக் சேர்ந்த ஹீரோயினுக்கும் காதல் வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த ஊர் இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதுதான் கதை.

மைனா வெற்றிக்கு பிறகு பிரபுசாலமன் இயக்குவதாலும், பிரபு மகன் நடிப்பதாலும் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. பல விநியோகஸ்தர்கள் பெரும் விலை கொடுத்து வாங்க முன் வந்தார்கள். ஆனால் இப்போது படத்தை ஸ்டூடியோ ஸ்கிரீன் நிறுவனம் வாங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வெளியிடும் உரிமையை ஸ்டூடியோ ஸ்கிரீன் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுகுறித்து ஸ்டூடியோ ஸ்கிரீன் அதிபர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது "எங்கள் நிறுவனம் நல்ல படங்களை வாங்க ஆர்வம் கொண்டுள்ளது. சமீபத்தில் அட்டகத்தியை வாங்கி அதை வெற்றி பெற வைத்தோம். அதேபோல இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைப்போம். ஸ்டூடியோ ஸ்கிரீன் தரமான படங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும்" என்றார்.

திருப்பதி பிக்சர்ஸ் உரிமையாளர் சுபாஷ் சந்திரபோஸ் கூறும்போது "படத்தை தனித்தனி ஏரியாவாக விற்க ஏற்பாடு செய்தபோது ஸ்டூடியோ ஸ்கிரீன் நிறுவம் மொத்தமாக வாங்கிக் கொள்ள முன்வந்தது. படத்தை திரையிடுவதிலும், அதனை விளம்பரப்படுத்துவதிலும் ஸ்டூடீயோ ஸ்கிரீனுக்கு நல்ல அனுபவமும், நெட் ஒர்க்கும் இருப்பதால் கொடுத்து விட்டோம். இனி நாங்கள் கும்கி பற்றி கவலைப்படமாமல் அடுத்த பட பணிகளை நிம்மதியாக தொடங்குவோம்" என்றார்.

Tags »
Studio Green, bought, kumki, கும்கியை, வாங்கியது, ஸ்டூடியோ ஸ்கிரீன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

settai - california,இந்தியா
2012-09-21 11:38:44 Report Abuse
 settai ஹலோ studio கிரீன்ஸ் கும்கிய வாங்குவின்களோ ஜிம்மிகிய வாங்குவின்களோ. ட்ரைலர போட்டு சாவடிக்காம இருந்தா சரி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சகுனி - Chennai,இந்தியா
2012-09-19 17:46:55 Report Abuse
 சகுனி தம்பி நானா வேலு இந்த அட்டஅகதி ஒரு படமாடா, இதை வாங்கி வெற்றி பெற வைத்தியா. உன்னைய ஒரு அட்டை கத்தியாலே போட்டா என்ன ஒரு போடு, மொக்கை கத்தி தான் உனக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in