ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"வாலு படத்தில், சிம்பு தான் வாலு பையன் என்றால், ஹன்சிகாவோ வாலு பெண்ணாக மட்டுமல்லாமல், வாயாடி பெண்ணாகவும் நடித்துள்ளார். "குஷி படத்தில், ஜோதிகா நடித்தது போல், படம் முழுக்க "துறுதுறுவென்று நடித்துள்ளார். இப்படிப்பட்ட இரு துருவங்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் தான், சந்தானம் நடித்துள்ளார். அதனால், இதுவரை மற்றவர்களை சந்தானம் கலாய்த்தது போய், இந்தப் படத்தில், சிம்பு - ஹன்சிகா இருவருமே, சந்தானத்தை கலாய்க்கின்றனர். அவர்களிடையே சிக்கி சந்தானம் படும் பாட்டை, பெரும் காமெடியாக படமாக்கி இருக்கின்றனர். குறிப்பாக, இதுவரை "கொலு பொம்மை போல் நடித்து வந்த ஹன்சிகா, இந்தப் படத்தில், கலகலப்பாக நடித்திருப்பதோடு, நிறைய காமெடியும் செய்துள்ளார். சிம்புவும், சந்தானமும், முன்கூட்டியே அவருக்கு ஒத்திகை கொடுத்து, காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து வருகின்றனர்.