Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

இந்திக்கு போகிறது ஸ்ரீகாந்தின் பாகன்!

Paagan movie goes to hindi
ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி, தமிழ் ரசிகர்களை கலகலப்பூட்டிய பாகன் படம் இந்தியிலும் உருவாகப் போகிறது. தமிழில் இந்தப் படத்தை இயக்கிய அஸ்லமே இந்திப் பதிப்பையும் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் - ஜனனி நடித்த பாகன், சின்ன பட்ஜெட்டில் நிறைவான லாபம் தந்த படமாக உருவெடுத்துள்ளது. மேலும் ஸ்ரீகாந்த்துக்கு அவரது பழைய மார்க்கெட்டை திரும்பப் பெற வைத்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பாலிவுட்காரர்கள், கிட்டத்தட்ட ப்ரியதர்ஷன் படம் மாதிரி இருக்கிறது என்று கூறி, படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளார்களாம். தமிழில் படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்லம்தான் இந்திப் பதிப்பையும் இயக்குகிறார். இந்தப் படத்தை ஆரம்பத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியிட நினைத்தவர்கள், இப்போது தெலுங்குக்கு ஏற்ற மாதிரி புதிய திரைக்கதை எழுதி ரீமேக் பண்ணும் முடிவில் உள்ளார்களாம். தெலுங்கு ரசிகர்களுக்கு ஸ்ரீகாந்த் ரொம்பவே பழக்கமானவர் என்பதால், அவரே ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.

Tags »
Paagan movie, goes, to hindi, இந்திக்கு, போகிறது, ஸ்ரீகாந்தின், பாகன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

கொச்சின் யானை - chennai ,இந்தியா
2012-09-16 14:36:52 Report Abuse
 கொச்சின் யானை இதிலேயே ஊத்திருச்சி;;;அதுல போய் என்ன கிழிக்க போகுது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in