Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

காமெடி நடிகர் லூஸ் மோகன் மரணம்!

Comedy actor loose mohan passed awayகாமெடி நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. சென்னையை பூர்விகமாக கொண்ட லூஸ் மோகன் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பி.யூ.சின்னப்பாவின் நாடக குரூப்பில் சேர்ந்து நடித்து வந்தார். பின்னர் ஹரிதாஸ் என்ற படம்மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ‌ஆரம்பத்தில் மோகன் என்ற பெயரிலேயே லூஸ் மோகன் நடித்து வந்தார். லூஸ் - டைட் என்ற கதாபாத்திரத்தில் பிரபலமானதைதொடர்ந்து மோகன், லூஸ் மோகன் எனும் அடைமொழியோடு நடித்தார். சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் லூஸ் மோகன். சென்னையிலேயே மோகன் பிறந்ததால், சென்னை பாஷை இவருக்கு மிகவும் சாதரணம். இந்த பாஷையை பேச இவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. மகாராசன் என்ற படத்தில் கமல் நடித்தபோது சென்னை பாஷையை இவரிடம் தான் கமல் கற்று கொண்டார். அந்தளவுக்கு சென்னை பாஷையில் இவர் பிரபலம்.

இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள லூஸ் மோகன் கடைசியாக தங்கர்பச்சானின் அழகி படத்தில் நடித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. டாக்டர்கள் அவ்வப்போது வந்து சிகிச்சை அளித்த நிலையில் லூஸ் மோகனுக்கு  இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவர் உடனடியாக ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த லூஸ் மோகனுக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்தார். அவரும் கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், 3 மகளும் உள்ளனர். சமீபத்தில் லூஸ் மோகன், தனது மகன் மற்றும் மருமகள் என்னை சரியாக கவனித்து கொள்வது இல்லை. பணத்திற்கு குறைவில்லை என்றாலும், "சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எனக் கேட்க கூட யாரும் இல்லை. மகன் இருந்தும் அனாதையாக உள்ளேன். அவர் என்னை கவனித்துக் கொண்டால் போதும். இதற்கு, போலீசார் தான் உதவி செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது மகன் தன்னை கவனிப்பதாக கூறியதை அடுத்து தனது புகாரை வாபஸ் பெற்று கொண்டார்.

மறைந்த லூஸ் மோகனின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சிவக்குமார், எஸ்.வி.சேகர், ராக்‌கெட் ராமசந்திரன், பாண்டியராஜன், டைரக்டரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட ஒருசில திரையுலகினரே அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூர் ஆர்.கே.சாலையில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

Tags »
Comedy actor, loose mohan, passed away, காமெடி நடிகர், லூஸ் மோகன், மரணம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (45)

Sivasankari - Pollachi,இந்தியா
2012-09-17 11:11:49 Report Abuse
 Sivasankari அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஸ்டெல்லா louis - karachi,பாகிஸ்தான்
2012-09-17 10:35:00 Report Abuse
 ஸ்டெல்லா louis மே ஹிஸ் சோல் ரெஸ்ட் இன் peace
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
pasupathi - muscat,ஓமன்
2012-09-17 10:03:02 Report Abuse
 pasupathi when i was doing primary and high school i have laughed generously with this man's innocent madras language....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
முத்துபாண்டி - woodlands`,சிங்கப்பூர்
2012-09-17 09:47:32 Report Abuse
 முத்துபாண்டி கோடிகணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள் தங்களுக்குள் இருக்கும் சக நடிகர்களுக்கே உதவ வழியில்லை...., மனமில்லை...., மிக கொடுமை..., உங்கள் கண்ணீர் அஞ்சலி போலியானது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Krish - Singapore,இந்தியா
2012-09-17 09:45:53 Report Abuse
Krish Unique Style Person. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in