'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் வேடத்தில் நடித்தவர் ஜனனி ஐயர். அந்த படத்தில் இவருக்கு பெரிய அளவில் வேடமில்லை. ஏதோ விஷாலை காதலிக்க ஒருவர் வேண்டும் என்பதற்காக அவரது கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார் பாலா. அதனால் ஜனனிக்கு நடிக்கத் தெரியுமா? தெரியாதா? என்பதே பலருக்கு சந்தேகம் ஏற்பட, புதிய படங்களுக்கு யாருமே அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
இதனால் சில மாதங்களாக போராடி ஒருவழியாக ஸ்ரீகாந்த் நடித்த பாகன் பட வாய்ப்பை கைப்பற்றினார் ஜனனி. அந்த படமும் சமீபத்தில் வெளியானது. இதில் ஜனனி ஓரளவு நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். இருப்பினும், அவர் எதிர்பார்ப்பது போன்ற முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போதும் மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் நடிகர்களுடன் நடிக்கத்தான் கதை சொல்ல வருகிறார்களாம். இதனால் மனசொடிந்து போன ஜனனி ஐயர், உடனடியாக எந்த படத்தையும் ஏற்காமல், தான் எதிர்பார்க்கும் மேல்தட்டு ஹீரோக்களின் பட வாய்ப்புகளுக்காக கல்லெறிந்து வருகிறார். ஜனனியின் முயற்சி கைகூடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.