ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மச்சக்காரன், இதயத்திருடன் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் காம்னா ஜெத்மலானி. கவர்ச்சிகரமாக நடித்தபோதிலும், ஏனோ இவரது நடிப்புக்கு கோலிவுட்டில் மவுசு இல்லாமல் இருந்தது. அதனால் சரியான வாய்ப்பு இல்லாமல் திருமலை இயக்கிய காசேதான் கடவுளடா என்ற படத்தில் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்த காம்னா, மீண்டும் சினம் கொண்டான் என்ற படத்திலும் புதுமுக நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில், படத்தின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர் திடீரென இறந்து விட்டதால், அந்த பட வேலைகளை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே முன்வரிசை நடிகர்களின் படவாய்ப்புகளை கேட்ச் பண்ணி விடலாம் என்று கணக்குப்போட்டு வைத்திருந்த காம்னா, தற்போது கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.