Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் வாலுக்கும் தலைப்பு பிரச்னை

Title problem for simbus Vaaluதலைப்புக்கு சண்டை போட்டுக் கொள்வது தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. விஷால் நடித்த சமரன் படத்தின் தலைப்பை ஏற்கெனவே சீமான் பதிவு செய்து வைத்திருந்ததால் சமர் ஆனது. துப்பாக்கியும், கள்ளத்துப்பாக்கியும் ஒருபுறம் நீதிமன்றம் வரை சென்று மோதிக் கொண்டிருக்கிறது. இவனும் பணக்காரன் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி இவனும் பாசக்காரன் ஆனது. தாண்டவம் படத்தின் தலைப்பு என்னுடையது என்று புதிதாக ஒருவர் கிளம்பியிருக்கிறார். இந்த வரிசையில் இப்போது சிம்பு, ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் வாலு படத்திற்கும் பிரச்னை வந்திருக்கிறது.

தெய்வசிகமாமணி என்ற புதுமுக இயக்குனரின் படத்துக்கு வாலு என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதை இளவரசன் என்பவர் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது "வாலு தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம். சிம்பு படம் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் படத்தை தயாரித்து முடித்து விட்டோம். அகில் ஹீரோவாகவும், சரண்யா நாக் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். ஆனால் சிம்பு படம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். பதிவு மூப்பு அடிப்படையில் தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம்" என்கிறார். ஆனால் சிம்பு படத்தை தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் தரப்போ "கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் பதிவு செய்தோம். அடுத்த ஏப்ரல் வரை இந்த தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம். இதை தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு கடிதமாக கொடுத்துள்ளது" என்கிறது.

இப்போது வாலு யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து தீவிரமா ஓடிக் கொண்டிருக்கிறது. பல லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் சினிமாக்காரர்களுக்கு மட்டும் தலைப்பு பஞ்சம் வருவது ஏன் என்று தெரியவில்லை. அதிலும் மோதிக்  கொள்கிற அளவுக்கு வாலு என்ற தலைப்பில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறதோ தெரியவில்லை.

Tags »
Title problem, simbu, Vaalu, வாலுக்கும், தலைப்பு, பிரச்னை,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

2012-09-11 19:55:01 Report Abuse
 அப்பாவி கோயிந்தன் எல்லாம் செட்டில்மென்ட் தான் சார் காரணம். படம் எடுக்காமலேயே பணம் எடுத்திரலாம்ல.... ஹ்ம்ம்ம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
லோகேஷ் - savigny-le-temple,பிரான்ஸ்
2012-09-11 12:49:39 Report Abuse
 லோகேஷ் சிம்பு சார் வாலுபையன் வைங்க அதான் உங்களுக்கு கரெக்ட்ட இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Reegan - Dubai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-11 05:38:31 Report Abuse
Reegan இளவரசு அண்ணா உங்களுக்கு வாலு ஒத்து வராது நீங்க அவங்களுடைய கொடுங்க அதான் சரி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கட் - chennai,இந்தியா
2012-09-10 23:46:50 Report Abuse
 வெங்கட் பிலாப் படம்.மொக்க பய
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
துபாய் வாலு - Dubai ,டிஜிபௌசி
2012-09-10 23:31:55 Report Abuse
 துபாய் வாலு ஏண்டா பய புள்ளைகளா வாலு நிமித்த முடியாதுன்னு தெரியாதா, பேசாம வேறு பேரு வச்சுட்டு போங்க. அப்படியும் இந்த வாலுதான் வேணும்னா ஒருத்தன் குரங்கு வாலு அப்படின்னு வையி இன்னொருவன் நாயி வாலு அப்படின்னு வையி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in