பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
திரைப்பட இயக்குனர்களாக வர விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு குறும்படத்தை எடுத்து அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்துவதைப்போல இசை அமைப்பாளராக, பாடகராக விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு ஆல்பத்தை தயார் செய்து, அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்தலாம் என்கிறார் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.
மேலும் அவர் கூறியதாவது: இன்றைக்கு இசையில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர்கள் எல்லாம் ஆல்பத்திலிருந்து வந்தவர்கள்தான். சினிமா பாட்டு மக்களிடம் வரவேற்பை பெறுகிறது என்றால் அதில் பாடகர்களின் பங்கு குறைவுதான். அந்த பாட்டை கொண்டுபோய் மக்களிடம் சேர்ப்பது, படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், நடித்த நடிகர், தயாரிப்பாளர் செய்யும் விளம்பரம். ஆனால் ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால் அந்த பெருமை முழுவதும் பாடகர்களுக்குத்தான்.
எனவே சினிமாவில் அறிமுகமாக விரும்புகிறவர்களுக்கு ஆல்பமே சிறந்த வழி. அதேபோல திரைப்பட இசையில் புகழோடு இருப்பவர்வளும், அவ்வப்போது இசை ஆல்பத்தை வெளியிட்டு தங்கள் தனித் திறமைய வெளிப்படுத்த வேண்டும். என்கிறார்