Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

படம் தயாரித்ததால் பொருளாதார சிக்கலில் காவேரி

Kavery under economic risk
நடிகை காவேரியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. காசி படத்தில் பார்வையற்ற விக்ரமிற்கு எல்லாமுமாக இருந்து தேற்றுபவர் இந்த காவேரிதான். கேரளத்தை பூர்வீகமாக கொண்ட காவேரி தமிழில் கண்ணுக்குள் நிலவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அப்பு, நினைக்காத நாளில்லை, சமுத்திரம், புன்னகை பூவே, கண்ணாடி பூக்கள், உள்பட பல படங்களில் நடித்தார். குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கு புகழ்பெற்ற காவேரி தெலுங்கில் கொஞ்சம் கிளாமராக நடித்து அங்கே கல்யாணி என்ற பெயரில் புகழ் பெற்றார்.

கே.பாக்யராஜ் இயக்கிய மவுன கீதங்கள் படம் நினைவிருக்கிறதா அதில் பாக்யராஜின் சுட்டி மகனாக நடித்து டாடி டாடி ஓ மை டாடி பாட்டு பாடியவர் சூரிய கிரன். அவர் இப்போது தெலுங்கில் பிரபல இயக்குனர். இவரைத்தான் காவேரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சொந்தப் பட தயாரிப்பு ஆசை வந்தது.

சேப்டர் 6 என்ற படத்தை காவேரி தயாரிக்க சூரிய கிரன் இயக்கினார். இதே படத்தை அத்யாயம் 6 என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரித்தார்கள். 6 விதமான காதல்களை சொல்லும் 6 தனிதனி கதைகள் கொண்ட படம். 6 கதையிலும் 6 விதமான வண்ணங்களை பயன்படுத்தினார்கள். அதாவது ஒரு கதை பச்சை நிறம் என்றால் ஹீரோ, ஹீரோயின் அணிகிற ஆடை, வீட்டு ஸ்கிரீன் இப்படி எல்லாமே அதிகபட்சம் பச்சையாக இருக்கும். இதை வித்தியாசமாக செய்தார் சூரிய கிரன். இதில் சோனியா சூரி என்ற நடிகை டாப்லசாக வேறு நடித்திருந்தார்.

இப்படி பல்வேறு கமர்ஷியல் அம்சங்கள் இருந்தபோதும் படம் தெலுங்கில் பெரும் தோல்வியை தழுவியது. மீடியாக்கள் படத்தை கிழித்து தொங்க விட்டது. ஒரு பெண் தயாரிப்பாளர் அதுவும் நடிகை இப்படி ஆபாச படம் எடுக்கலாமா என்று போட்டுத் தாக்கினார்கள். படத்துக்கான பட்ஜெட் இரு மொழியிலும் சேர்த்து சுமார் 6 கோடி ரூபாய். தெலுங்கில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமிழில் அதை வெளியிடும் திட்டத்தை கைவிட்டார் காவேரி.

6 கோடி ரூபாய் என்பது காவேரி போன்ற நடுத்தர நடிகைகளுக்கு பெரும் தொகை. இப்போது அதை மீட்டெடுக்க காவேரி தொலைக்காட்சி தொடர், சினிமா என்று கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி நடித்துக் கொண்டிருக்கிறார். ராம நாராயணன் இயக்கி சுட்டி பிசாசு என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்கூட நடித்தார். சூரிய கிரனும் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

மனைவி பணத்தில் படம் எடுக்கும் கணவன்மார்களுக்கு காவேரியின் அனுபவம் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

Tags »
Kavery, under, economic risk, பொருளாதார சிக்கலில், காவேரி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

எழில் - hyderabad,இந்தியா
2012-09-09 21:49:03 Report Abuse
 எழில் இந்த இயக்குனர் என் தந்தை யின் நண்பர். இவர் நல்லவர்.. படம் சரியாக போகவில்லை.. விரைவில் வெற்றி படம் கொடுப்பார்.. ஜெயிப்பார்.. பாருங்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாலமுருகன் முத்துக்கிருஷ்ணன் - சென்னை  ( Posted via: Dinamalar Android App )
2012-09-09 20:08:23 Report Abuse
பாலமுருகன் முத்துக்கிருஷ்ணன் அதெப்படிடா ஒருத்தரைப் பற்றி எதுவுமே தெரியாமல் வாய் கூசாமல் புழுதி் வாரித்தூற்ற முடிகிறது உன்னைப் போன்றவர்களால்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ராமன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2012-09-09 16:30:53 Report Abuse
 ராமன் இவரும் இவரது கணவரும் நல்லெண்ணம் இல்லாதவர்கள்... அதனால் தான் இவர்கள் வாழ்கையில் இவ்வளவு தோல்விகள்... இவருடைய கனவாருக்கு இப்பொழுது வேலை எதுவும் இல்லை... சும்மா தான் இருக்கிறார்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in