மனதில் வந்த கம்பீரம்! அனுஜா ஐயர் பெருமிதம்!!
சின்னத்திரை தொடரில் வக்கீலா நடித்து வரும் நடிகை அனுஜா ஐயர், தனது மனதில் தானாக கம்பீரம் வந்திருப்பதாக கூறியுள்ளார். சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு சென்ற அனுஜா ஐயர் விஜய் டிவியில் இரவு பத்துமணிக்கு ஒளிபரப்பாகும் தர்மயுத்தம் தொடரில் வக்கீல் கோட் போட்டு கம்பீரமாக வருகிறார்.
சீரியல் அனுபவங்கள் குறித்து அனுஜா அளித்துள்ள பேட்டியில், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தாலும் டெல்லியில்தான் மாஸ் கம்யூனிகேசன் படித்தேன். மாடலிங் வாய்ப்போடு சினிமாவும் தேடி வந்தது. உன்னைப்போல் ஒருவன் சினிமாவில் ரிப்போர்ட்டராக நடிக்கும் போதே ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் மைக்குமாக தில்லாக நடித்து இருந்தேன். அது பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது அதேபோல் தில்லான கேரக்டர் சின்னத்திரையில் அமைந்திருக்கிறது.
தர்மயுத்தம் தொடரில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்ல வேண்டும். ஏழு வருடங்களாக குடும்ப விஷயம் ஒன்றுக்காக கோர்டுக்கு போனது இப்போது சீரியலில் நடிக்க ஈஸியாக இருக்கிறது என்கிறார் அனுஜா. சின்னத்திரை தொடர்களிலேயே இந்த தொடர்தான் 5 டி கேமராவில் ஷூட் செய்யப்படுகிறது. இது மாறுபட்ட ஃபார்மேட் என்பதால்தான் இந்த தொடரில் நான் கமிட் செய்து கொண்டேன். இந்த தொடரைப் பார்த்துவிட்டு என் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. சீரியலுக்காகத்தான் கறுப்பு கோட்டை அணிகிறேன் என்றாலும் மனதில் தானாகவே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கொள்கிறது, என்று கூறியுள்ளார்.