Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சுந்தர்.சி-க்கு ஆடி கார் பரிசளித்த குஷ்பு!

Kushboo gifts Audi car to sundar.cநடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சிக்கு விலை உயர்ந்த ஆடி கியூ 5 காரை பரிசாக அளித்துள்ளார். நடிகை குஷ்புவும், டைரக்டர் சுந்தர்சியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட குஷ்பு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பங்கேற்று வருகிறார். டைரக்டர் சுந்தர்சி டைரக்ஷனுடன், ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது கணவருக்கு பிடித்த காரை குஷ்பு பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு எல்லாமே சுந்தர் சி.தான். என் காதல் வெளிப்பாடாகவே இந்த காரை வாங்கி பரிசாக அளித்துள்ளேன். சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இவ்வருடத்தின் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது. நான் இப்படத்தின் தயாரிப்பாளர் இதில் பணியாற்றியதற்காக சுந்தர்சிக்கு ஊதியம் அளிக்கவில்லை. அதற்கு பதில் ஆடி கார் அளித்துள்ளேன். சுந்தர்.சிக்கு கார்கள் மீது அதிக பிரியம். அவருக்கு ஏதாவது பரிசு பொருளை கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது எனவேதான் கார் பரிசளித்தேன். சுந்தர்.சி இன்னும் வெற்றிகரமான படங்களை கொடுப்பதற்கு இந்த கார் பரிசு ஊக்கப்படுத்துவதாக இருக்கும், என்றார்.

Tags »
Kushboo, gifts, Audi car, sundar.c, சுந்தர்.சி-க்கு, ஆடி கார், பரிசளித்த, குஷ்பு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

உண்மை விளம்பி - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-09-10 09:40:10 Report Abuse
 உண்மை விளம்பி ஒரே குடும்பத்தில் கணவன் மனைவி தங்களுக்குள் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவது இயற்கை தானே. இதில் என்ன அதிசயம். கணவன் மனைவி உறவு சரியில்லாதபோது தான் உறவை இணைக்க இது போன்ற பரிசுகள் தேவைப்படும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சுந்தர் டி - Hyderabad,ஹாண்ட்ரஸ்
2012-09-10 01:19:56 Report Abuse
 சுந்தர் டி ஏண்டா சுந்தரு ஒனக்கு எதுக்கு ஆடி காரு ஆவணி இல்லை ஆடாத காரு வாங்கலாம்ல. இந்த சு நா பையன் நம்ம ரோசாவை ஏர்போர்ட்டுல ஹைதராபாத் சைட்டு அடிசிகினு இருந்தான் அவ கண்டுக்காம போயிட்டா பக்கத்துல சுநாவின் எடுபுடி அல்லக்கை வேற. நா இதை அருகில் இருந்து பார்த்து கொண்டுதான் இருந்தேன். எப்படியோ போ.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in