தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் உருவாகி வரும் "பேஸ் 2 பேஸ் திரைப்படத்தில் நாயகன் மம்முட்டிக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே மோகன்லாலுடன் இணைந்து "கந்தகார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மம்முட்டியுடன் நடிக்க உள்ள "பேஸ் 2 பேஸ் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகை திவேதியிடம் "மம்முட்டியின் மகன் நடிக்க வந்துவிட்ட நிலையில் மம்முட்டியுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திவேதி, "எனக்கு மம்முட்டி மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்திருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் மம்முட்டியின் மகன் துல்கருடன் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுங்கள், ஒரே படத்தில் வேண்டுமானாலும் அப்பாவுக்கும் மகனுக்குமே ஜோடியாக நடிக்கிறேன் கூறிவிட்டார்.