Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

முகமூடியில் பாட்டுக்கு கத்தரி: பூஜா அப்செட்

pooja hegde upset with mugamoodi
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் முகமூடி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹீரோயினாக நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. படத்தை முதல் நாளே தியேட்டரில் பார்க்க சென்றவருக்கு அதிர்ச்சி. காரணம் அதில் அவர் நடித்திருந்த ஒரு டூயட் பாடல் காட்சியே சுவாகா ஆகியிருந்தது. ஏற்கெனவே படத்தில் தனக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்று வருந்திக் கொண்டிருந்த பூஜாவுக்கு இது கூடுதல் அதிர்ச்சி. இடைவேளைக்கு பிறகு கதை ஆக்ஷன் பக்கம் திரும்பி விடுவதால் பூஜாவுக்கு வாய்ப்பு குறைவு இந்த குறையை போக்கத்தான் "மாயாவி மாயாவி" என்ற பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் எடுத்தார்கள். ஜீவா முகமூடி அணிந்து மக்களுக்க நல்லது செய்வது போலவும் அதை நினைத்து நினைத்து மகிழ்ந்து பூஜா ஆடிபாடுவது போலவும் அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. கிட்டதட்ட ஒருவாரம் சுவிட்சர்லாந்து குளிரில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி இப்படி அம்பேலாகிவிட்டதே என்று தன் தோழிகளிடம் வருத்தப்பட்டிருக்கிறார் பூஜா.

பூஜா வருந்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். சுவிட்சர்லாந்தில் ஒரு வாரம் ஒரு பாட்டு எடுக்க எப்படியும் 50 லட்சத்திற்கும் குறையாமல் செலவு பிடித்திருக்கும். இந்தப் பாடலை மிகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டி பெருமைப் பட்டார். இப்போது படத்தின் நீளம் கருதி கத்தரி போட்டுவிட்டார்கள். சில வெளியூர் தியேட்டர்களில் இன்னொரு பாட்டையும் ஆபரேட்டரே எடிட் செய்து விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.

"சரியாக திட்டமிடாமல் இப்படி தயாரிப்பாளர் தலையில் மஞ்சள் அரைப்பதை இந்த இயக்குனர்கள் எப்போதுதான் கைவிடுவார்களோ"

Tags »
pooja hegde, upset, with mugamoodi, முகமூடியில், பாட்டுக்கு, கத்தரி, பூஜா ஹெக்டே, அப்செட்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

Kumar - Madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-05 18:42:45 Report Abuse
Kumar முகமூடி கிழிந்தது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரமேஷ் - THENI,இந்தியா
2012-09-05 12:48:39 Report Abuse
 ரமேஷ் ஒரு பட்டு எடுக்க எதுக்கு வெளிநாடு எல்லாம் போகணும் இங்கே இல்லாத இடமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
balaji - kovilpatti,இந்தியா
2012-09-05 11:20:48 Report Abuse
 balaji செம மொக்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Thangam - Tamilnadu,இந்தியா
2012-09-05 07:28:03 Report Abuse
 Thangam "சரியாக திட்டமிடாமல் இப்படி தயாரிப்பாளர் தலையில் மஞ்சள் அரைப்பதை இந்த இயக்குனர்கள் எப்போதுதான் கைவிடுவார்களோ"......... நல்ல டைரக்டர் ஆ பாருங்கப்பா... இவன் ஏற்கனவே ஜப்பானிஸ் movie a remake பண்ணி nandhalala film எடுத்துட்டு ஓவரா பீலா வுட்டுக்கிட்டு திரியிறான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - srivi,இந்தியா
2012-09-04 19:38:09 Report Abuse
 பயில்வான் செம மொக்க படம் இயக்குனரை போலவே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in