100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! | ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா! | இணையதளத்தில் அஞ்சுஅரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது! | வனத்துறையினரை தாக்கிய கலாபவன் மணி தலைமறைவு! | ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்! |
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் முகமூடி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹீரோயினாக நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. படத்தை முதல் நாளே தியேட்டரில் பார்க்க சென்றவருக்கு அதிர்ச்சி. காரணம் அதில் அவர் நடித்திருந்த ஒரு டூயட் பாடல் காட்சியே சுவாகா ஆகியிருந்தது. ஏற்கெனவே படத்தில் தனக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்று வருந்திக் கொண்டிருந்த பூஜாவுக்கு இது கூடுதல் அதிர்ச்சி. இடைவேளைக்கு பிறகு கதை ஆக்ஷன் பக்கம் திரும்பி விடுவதால் பூஜாவுக்கு வாய்ப்பு குறைவு இந்த குறையை போக்கத்தான் "மாயாவி மாயாவி" என்ற பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் எடுத்தார்கள். ஜீவா முகமூடி அணிந்து மக்களுக்க நல்லது செய்வது போலவும் அதை நினைத்து நினைத்து மகிழ்ந்து பூஜா ஆடிபாடுவது போலவும் அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. கிட்டதட்ட ஒருவாரம் சுவிட்சர்லாந்து குளிரில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி இப்படி அம்பேலாகிவிட்டதே என்று தன் தோழிகளிடம் வருத்தப்பட்டிருக்கிறார் பூஜா.
பூஜா வருந்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். சுவிட்சர்லாந்தில் ஒரு வாரம் ஒரு பாட்டு எடுக்க எப்படியும் 50 லட்சத்திற்கும் குறையாமல் செலவு பிடித்திருக்கும். இந்தப் பாடலை மிகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டி பெருமைப் பட்டார். இப்போது படத்தின் நீளம் கருதி கத்தரி போட்டுவிட்டார்கள். சில வெளியூர் தியேட்டர்களில் இன்னொரு பாட்டையும் ஆபரேட்டரே எடிட் செய்து விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.
"சரியாக திட்டமிடாமல் இப்படி தயாரிப்பாளர் தலையில் மஞ்சள் அரைப்பதை இந்த இயக்குனர்கள் எப்போதுதான் கைவிடுவார்களோ"