Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சினிமாவை மொழியால் பிரிக்காதீர்கள்! - நந்திதா தாஸ்

Dont seprate cinema using language says nandita dasஅழகி படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் நந்திதாதாஸ். சீனு ராமசாமியின் நீர்பறவையில் மீனவ பெண்ணாக நடிக்கிறார். திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பிறகு நடிக்கும் முதல் படம் இது. நீர்பறவையில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது: குழந்தை பிறந்த பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தேன். அப்போதுதான் சீனு ராமசாமி நீர்பறவை கதையை சொன்னார். ரொம்ப புடிச்சிருந்தது. நீங்க இதில் நடிக்கலேன்னா இந்த படத்தையே நான் எடுக்க மாட்டேன்னு சொன்னார். அவர் என்மேல வச்சிருந்த நம்பிக்கை ரொம்ப புடிச்சிருந்தது உடனே ஒத்துக்கிட்டேன். நடிப்பை பற்றி பிரச்னையில்ல. ஆனால் வசனம் பேசத்தான் ரொம்ப சிரமப்பட்டேன். லோக்கல் லாங்குவேஜ்க்கு ஏத்தமாதிரியா லிப் மூவ்மெண்ட்தான் சிரமமா இருந்துச்சு. இப்போ நடிச்சு முடிச்சாச்சு. நினைச்சு பார்க்க ஆச்சர்யமா இருக்கு.

தமிழ் நடிச்சிட்டு மும்பை பக்கம் போனா "என்னங்க ரீஜினல் லாங்குவேஜ்ல நடிக்கிறீங்க. இந்தியில மார்க்கெட் போயிடுச்சா"ன்னு மீடியாகாரங்க கேக்குறாங்க. நல்ல படம் எதுவா இருந்தாலும் அதை மொழிவாரியா பிரிச்சு பார்க்காதீங்க. இந்திய படம்னு சொல்லுங்க, தமிழ்ல இப்போ அற்புதமான படங்கள் வருது. நல்ல இளம் இயக்குனர்கள் வர்றாங்க. அப்படி இருக்கும்போது ஏன் தமிழ் படத்தை ஒரு ரீஜினல் லாங்குவேஜ் படமா பிரிச்சு பார்க்கணும்னு அவுங்க கிட்ட சொன்னேன். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் அடுத்த படம்கூட தமிழா இருக்கலாம்.

Tags »
Dont seprate, cinema, using, language, says, nandita das, சினிமாவை, மொழியால், பிரிக்காதீர்கள், நந்திதா தாஸ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in