அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் அதிகமாகி வருகிறது. வானம் படத்தில் சிம்பு-பரத், வேட்டை படத்தில் ஆர்யா-மாதவன், கலகலப்பு படத்தில் சிவா-விமல், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்-ஆர்யா நடிக்கும் புதியபடம் போன்ற வரிசையில் இப்போது கழுகு கிருஷ்ணாவும், மைனா விதார்த்தும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார். படத்தின் கதைக்களம் இதுவரை யாரும் சொல்லப்படாத கதைக்களமாக உருவாக்கி இருக்கிறாராம் டைரக்டர். இப்படத்தில் கிருஷ்ணா-விதார்த் தவிர தன்ஷிகா நடிகையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. நவம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.