Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் படம் தயாரிக்கிறார் ரம்பா

Ramba turn as producer againநடிகை ரம்மா இரண்டு ஆண்டுகளுக்கு தொழிலதிவர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடா நாட்டில் செட்டிலாகிவிட்டார். அவர் முன்பு தன் அண்ணன் வாசுவுடன் இணைந்து சில படங்களை தயாரித்தார். த்ரீ ரோசஸ் என்ற படம் எடுத்தார். ஜோதிகா, லைலாவுடன் ரம்பாவும் நடித்தார். இந்தப் படம் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது. பெரும் கடனில் சிக்கினார் ரம்பா. இந்த நிலையில் இழந்த பணத்தை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் விடியும் வரை காத்திரு என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். அந்தபடமும் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் பெரும் பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் ரம்பா.

ரம்பாவின் அண்ணன் வாசுவிற்கு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க ஆசை இருந்து கொண்டே இருந்தது. எப்படியோ தங்கை ரம்பாவின் சிபாரிசில் மீண்டும் படம் தயாரிப்பில் இறங்கி விட்டார். மலையாள இயக்குனர் சித்திக்கின் உதவியாளர் சுரேஷ் என்பவர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரு படத்தை தயாரிக்கிறார். ஹீரோ தேவயானியின் தம்பி நகுல். விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

Tags »
Ramba, turn, as producer, again, மீண்டும், படம், தயாரிக்கிறார், ரம்பா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

சந்திரன் - chennai ,இந்தியா
2012-09-02 14:23:40 Report Abuse
 சந்திரன் சொட்டை தலையணை கட்டியதால்...உனக்கு சுக்கிர திசை கிழிக்குது போல....போட்டு தாக்கு அம்மிணி....நாட்டில் பல கோமாளி ரசிகனுக இருக்கும் வரைக்கும் உங்க காட்டில் பண மழைதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in