Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மாவோயிஸ்ட்கள் படம் இயக்குகிறார் ஷாஜி கைலாஷ்

Shaji kailas to direct maoist storyபிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் இயக்குவதில் வல்லவர். இவர் இயக்கிய சிந்தாமணி கொலை வழக்கு மலையாளத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதே படத்தை தமிழில் எல்லாம் அவன் செயல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. இதுதவிர தமிழில் வாஞ்சிநாதன், ஜனா படங்களை இயக்கினார். இப்போது இவர் மலையாளத்தில் ஒரு படம் இயக்கி கொண்டிருக்கிறார். இந்தப் படம் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று கதைகளை கொண்டதாக இந்தப் படம் இருக்கிறது. ஒரு கதை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றியது. இதில் கோட்சேவாக பிருத்விராஜ் நடிக்கிறார். மற்றொரு கதை மாவோயிஸ்டுகளை பற்றியது. மூன்றாவது கதை நக்சலைட்டுகள் பற்றியது. இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கவும் ஷாஜி முடிவு செய்துள்ளார். எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்த ஆர்.கே. ஒரு கதையில் நடித்து தயாரிக்கிறார். மற்ற நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Tags »
Shaji kailas, to direct, maoist story, மாவோயிஸ்ட்கள், படம், இயக்குகிறார், ஷாஜி கைலாஷ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in