எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
காதல் படத்தில் ஹீரோயினாகி இருக்க வேண்டியவர் சரண்யா. அந்த வாய்ப்பு சந்தியாவுக்கு செல்ல... அவரது தோழியாக நடித்தார். ஆனாலும் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சியில் இறங்கினார். விளையாட்டு, மழைக்காலம், உள்பட சில படங்களில் நடித்தார். அவை எதுவும் சரியாக போகவில்லை. பேராண்மை வெற்றி பெற்றாலும் சரண்யா அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. ஆனாலும் பெயரை சரண்யா நாக் என்று மாற்றிக் கொண்டு விடாப்பிடியாக இன்னும் முயற்சித்து வருகிறார்.
அவரின் மினி பேட்டி: வெற்றி எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடாது. பாலாஜி சக்திவேல் சார் சந்தியாவை சந்திக்கவில்லை என்றால் நான்தான் காதல் படத்தின் கதாநாயகி. இன்றைக்கு நான் இருக்கும் இடமே வேறு. ஆனால் இறைவன் ஆடும் ஆட்டத்தில் நாம் எல்லாம் பொம்மைகள் தானே. இறைவன் ஒன்றை கொடுக்க மறுக்கிறான் என்றால் அதைவிட பெரிதாக ஏதோ ஒன்றை கொடுக்கப் போகிறான் என்று பொருள். அப்படித்தான் இதை நான் எடுத்துக் கொண்டேன். இப்போது திருவாசகம், நிர்யணம், முயல் உள்பட 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பிரேமெண்ட மயக்கம் என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கிறேன்.
முயல் படத்தில் மக்களுக்காக போராடும் போராளியாக நடிக்கிறேன். ஒரு படத்தில் பள்ளி மாணவியாகவும், இன்னொரு படத்தில் கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறேன். தெலுங்கு படத்தில் கிளாமராக நடிக்கிறேன். நான் நடிக்கும் இந்த படங்களில் ஒன்று காதல் படம் மாதிரி அமையாதா? பேராண்மை மாதிரி அமையாதா? என்ற நம்பிக்கைதான் என்னை சினிமாவில் தொடர்ந்து இருக்கச் செய்கிறது. நிச்சயம் நானும் ஒரு நாள் ஜெயிப்பேன். என்கிறார் சரண்யா நாக்.