நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! | சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் |
பேரரசு இயக்கி உள்ள படம் "திருத்தணி". பரத், சுனேனா நடித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் வெளிவருவதற்கு திணறிக் கொண்டிருக்கிறது. காரணம் படப்பிடிப்பு நடந்தபோதே இயக்குனர் பேரரசுக்கும், தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது. பேரரசு தானே இசை அமைப்பாளர் என்ற சொல்லி அதற்கு ஒரு சம்பளம் பெற்றுக் கொண்டார். தன் மனைவியை பாடகியாக்கி அதற்கு தனி சம்பளம் பெற்றுக் கொண்டார். படத்தை பிரமாண்டமாக எடுக்கிறேன் என்று சொல்லி பட்ஜெட்டை பல மடங்கு எகிற வைத்துவிட்டார். அதனால் பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளான தயாரிப்பாளர் படத்தை கைவிட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. பேரரசுக்கும் இதை விட்டால் வேறு படம் இல்லை என்பதால் அவரே சில நண்பர்களிடம் கடன் வாங்கி படத்தை முடித்துள்ளார். ஹீரோ பரத், ஹீரோயின் சுனேனா, மற்றும் சில முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்துள்ளனர். இதானல் இப்போது படம் முடிந்து விட்டது. ஆனாலும் வெளியீட்டிற்கும், விளம்பரத்திற்கு ஒரு தொகை தேவைப்படுமே அதை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் இருக்கிறார் பேரரசு.