Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சர்ச்சைகளிலிருந்து விலகி இருக்கிறேன்: லட்சுமிராய் சிறப்பு பேட்டி!

Special interview with lakshmi rai
லட்சுமிராய் என்றாலே சர்ச்சைதான். கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு, மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நெருக்கம், பார்ட்டியில் த்ரிஷாவுடன் மோதல் என்று எப்போதுமே சர்ச்சைகளோடு இருப்பவர் இப்போது அதிலிருந்து விலகியே இருக்கிறேன் என்கிறார். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் அவரது சிறப்பு பேட்டியை படியுங்கள்.

* தமிழ் சினிமாவில் நடிக்க சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டீர்களாமே?

எப்போதும் ஒரே மாதிரியான சம்பளத்தில் நடித்துக் கொண்டிருக்க முடியுமா. சின்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது குறைந்த சம்பளம் வாங்கினேன். மங்காத்தா, காஞ்சனான்னு ரெண்டு ஹிட் கொடுத்திருக்கேன். சம்பளத்தை உயர்த்திட்டேன். இப்போது தாண்டவம் படத்தில் நடிக்கிறேன். வேறு படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

* தாண்டவம் படத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் குறைவாமே?

யார் சொன்னது. எனது கேரக்டர் மிக முக்கியமானது. கேரக்டர் பிடித்திருந்ததால்தான் நடிக்கிறேன். படத்தின் கதையும், திருப்பமும் எனது கேரக்டர்மேல்தான் இருக்கிறது. படம் வந்ததும் அது தெரியும்.

* தமிழ் காஞ்சனா சரத்குமார், கன்னட காஞ்சனா சாய்குமார் என்ன வித்தியாசம்?

தமிழ் காஞ்சனாவில் சரத்குமார் பிரமாதமாக நடித்திருந்தார். கன்னடத்தில் சாய்குமாரும் நடித்திருக்கிறார். இரண்டு பேருடனும் எனக்கு காமினேஷன் கிடையாது அதனால் அவர்கள் நடிப்பை நேரில் நான் பார்க்கவில்லை அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது.

* இன்னும் கிளாமர் இமேஜுடன்தானே இருக்கிறீர்கள்?

லட்சுமிராய் என்றாலே கிளாமர் கேரக்டரோடுதான் வருகிறா£கள். ஆனால் நான் எந்த கேரக்டரிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். என் உயரமும், தோற்றமும் கிளாமருக்கு ஏற்றதாக இருக்கிறது. இதுமாதிரி எல்லோருக்கும் அமையாது. கிளாமராக நடிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் அது எனக்கு இருக்கிறது.

* தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லையே?

வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கிற மாதிரி நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறேன். முன்பு வந்த படத்தில் எல்லாம் நடித்து பெயரைக் கெடுத்து கொண்டது மாதிரி இப்போது செய்ய மாட்டேன். என் இமேஜ் இப்போது உயர்ந்திருக்கிறது. அதை காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?. மலையாளத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வருடத்திற்கு ஒரு படம் வீதம் ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.

* இந்தி முயற்சி என்னாச்சு--?

இந்தியில் நடிக்க வேண்டும் என்றால் மும்பையில் தங்கியிருக்க வேண்டும். நான் தென்னிந்திய மொழிகளில் பிசியாக இருப்பதால் அது சாத்தியப்படவில்லை. இப்போது அந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். 2013ல் கட்டாயம் இந்தியில் நடித்து விடுவேன்.

* பாலியல் தொழிலாளி, லெஸ்பியன் மாதிரியான காண்டவர்சி கேரக்டர்களில் நடிப்பீர்களா?


அந்த மாதிரி கேரக்டரில் தென்னிந்திய மொழியில் நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தியில் நடிக்கலாம். ஷபனா ஆஷ்மி, ஐஸ்வர்யாராய் மாதிரி அழுத்தமான கேரக்டர்களிலும், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே மாதிரி கலர்புல் கேரக்டர்களிலும் நடிப்பேன்.

* கிரிக்கெட் கேப்டன் டோனி, ஸ்ரீசாந்த், யுவராஜ் ஆகியோரின் தோழி என்று பரபரப்பாக இருந்தீர்களே?

நான் கிரிக்கெட்டின் பரம ரசிகை. அந்த வகையில் அவர்களை பிடிக்கும். அவர்கள் எனது நண்பர்கள். என் பிறந்த நாள் விழா பார்ட்டிக்கு வந்து வாழ்த்தினார்கள். அவர்கள் நடத்திய பார்ட்டிகளுக்கு நான் போயிருக்கிறேன். அவர்கள் இப்போதும் என் நண்பர்கள்தான். உலக கோப்பையை வென்றபோது மைதானத்துக்கே சென்று வாழ்த்தினேன். நல்ல நண்பர்கள் என்பதை தாண்டி வேறு எதையாவது நீங்கள் யோசித்தால் அது உங்கள் கற்பனை.

* திடீரென்று தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்தீர்களே?

பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டவர் எங்கள் குடும்ப நண்பர் அவருக்காக ஓட்டுக் கேட்டேன் அவ்வளவுதான். பிரச்சாரம் செய்யவில்லை. எனக்கு அரசியல் தெரியாது.

* பெங்களூரிலும், பெல்காமிலும் ஒயின்ஷாப் நடத்துகிறீர்களாமே?

அது எங்கப்பா. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.

* லாரன்சுடன் நெருக்கம் என்று கிசுகிசுக்கப்பட்டதே-?

நீங்களே அதை கிசுகிசு என்று சொல்லிவிட்டீர்கள். அதற்குமேல் நான் என்ன சொல்ல. லட்சுமிராயை சுற்றி எப்போதும் கிசுகிசுக்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. காரணம் நான் வெளிப்படையானவள். அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் இப்போது தென்னிந்திய ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறேன். அதனால் சர்ச்சைகளிலிருந்து விலகி இருக்கிறேன். சர்ச்சைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்கிறேன். இனி லட்சுமிராய் பற்றி யாரும் கிசுகிசு எழுத முடியாது. நண்பர்களைகூட குறைத்துக் கொண்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்துகிறேன். 

Tags »
lakshmi rai, Special interview, லட்சுமிராய், சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

naraynan - chennai,இந்தியா
2012-09-10 18:40:03 Report Abuse
 naraynan சூப்பர் கீபிட் up
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - erode  ( Posted via: Dinamalar Android App )
2012-09-03 08:45:30 Report Abuse
ram என்னது மங்காத்தா காஞ்சனா னு 2 hit நீங்க குடுத்தீங்களா?? ok ok
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in