ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில், "பத்து பத்து என்ற படத்தில், கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சோனா. அதன்பிறகு, தயாரிப்பாளர் என்ற அரிதாரத்தை அவர் பூசிக் கொண்டபோதும், அவர் மீது படிந்திருந்த கவர்ச்சி முத்திரை மறையவில்லை. இந்த நிலையில், "கதயல்லித்து ஜீவிதம் என்றொரு மலையாள படத்தில், சோனாவின் நடிப்புத் திறமைக்கு சவால் விடும்படியாக வேடம் கிடைத்துள்ளது. இதனால், உற்சாகத்தில் இருக்கும் சோனா, "இனி, கவர்ச்சியை வெளிப்படுத்தும் வேடங்களை தவிர்த்து, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறார். தமிழில், அது மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை என்றால், தமிழை ஓரங்கட்டிவிட்டு, மலையாள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார்.