சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
வேறெந்த மொழி சினிமாவிலும் இல்லாத ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் உண்டு. அது காமெடியன்களின் குரூப் பாலிட்டிக்ஸ். இதை தொடங்கி வைத்தவர் வடிவேலு. தனக்கென்று ஒரு காமெடி கோஷ்டி வைத்திருந்தார். சிங்கமுத்து, போண்டாமணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், கிங்காங் அவர் அணியில் இருந்தார்கள். வடிவேலு நடிக்கும் படத்தில் கண்டிப்பாக அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வடிவேலு அலுவலகத்தில் எடுபிடி வேலைகளை பார்ப்பார்கள். சிங்கமுத்து வடிவேலுவிடமிருந்து பிரிந்தபோது சிலர் அவருடன் சென்று விட்டார்கள். சிலர் வடிவேலுவிடமே தங்கி "அண்ணன் ரொம்ப நல்லவரு சிங்கமுத்துதான் மோசம்" என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்கள். வடிவேலு அரசியலுக்கு சென்று சினிமாவை தவறவிட்டபோது இந்த கோஷ்டிகள் வேலை இழந்தது. சிலர் கஞ்சா கருப்புவிடம் சேர்ந்து விட்டனர்.
இதுபற்றி கஞ்சா கருப்பு கூறும்போது "காமெடியனுக்கு எதுக்குண்ணே குரூப் பாலிட்டிக்ஸ். இவிங்களுக்கு சம்பளம் ரொம்ப குறைவுன்னே. நிறைய பேரு குடிசை வீட்டுலதான்னே வாழ்றாங்க. அதான் நான் அவிங்களை கூப்பிட்டு வச்சிக்கிட்டேன். வாய்ப்பு இருக்கோ இல்லியோ அவிங்களுக்கு என்னால முடிஞ்சதை செஞ்சிக்கிட்டிருக்கேன். குரூப் பாலிட்டிக்ஸ் இல்லேன்னா அவிங்க பாட்டுக்கு நடிச்சு நாலு காசு பார்ப்ப்பானுங்கண்ணே. இனிமேலாவது காமெடியன்கள் குரூப் பாலிட்டிக்ஸ் பண்ணாம இருக்கணும்" என்றார்.