Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

குடிப்பவர்களுக்காக மிஸ்கின் எழுதிய சோக பாட்டு..!

Myskkins lyricst for mugamoodiஇயக்குநர் மிஸ்கின் படம் என்றாலே அவரது படத்தில் கண்டிப்பா ஒரு மஞ்சள் புடவை, இல்ல ஒரு பார் பாட்டு, இல்ல ஒரு கானா பாட்டு இப்படி ஏதேனும் ஒரு பாட்டு மக்கள்கிட்ட போய் சேரும். அந்த வரிசையில் ஜீவா நடிக்கும் முகமூடி படத்தில் மஞ்சள் புடவை பாட்டு கண்டிப்பா இல்ல. ஆனால் குடிகாரர்களின் சோகத்தை சொல்லும் பாட்டை சில தத்துவம் கலந்து எழுதியிருக்கும் மிஸ்கின் கிட்ட இந்தபாட்டை பற்றி கேட்டதும், அவர் உணர்ச்சி மிகுந்து சொன்ன சில வார்த்தைகளை அப்படியே எழுதி இருக்கோம். தமிழ்நாட்டில் இரண்டு இடத்தில் மக்கள் அதிகமா கூடுறாங்க. ஒன்று கோயில், இன்னொன்று குடிக்கிற இடம். ரெண்டிலுமே எனக்கு அனுபவம் இருக்கும். அதான் அந்த வலியை அப்படியே பதிவு பண்ணியிருக்கேன். வெறும் கமர்ஷியல் எண்ணத்தோடு பார்க்க வேண்டாம். உறவை பிரிந்தவன், காதல் பிரிவு, கடன்சுமை, கஷ்டப்படுறவன் என்று அத்தனை பேரும் இதில் உண்டு. அந்தபாட்டில் ஒரு வரி, விடிஞ்சா வாழ்க்கை சோகம்... என்று திருநங்கைகளுக்காக எழுதி இருப்பேன். அவங்க கதையை கூட சொல்லி இருக்கேன். குடிச்சா மறந்து போகும் என்று எழுதி இருக்கேன். வெறும் கிளர்ச்சிக்காக மட்டும் இல்ல, இந்த தமிழ் சமுதாயத்தின் சோகத்தை இந்த பாட்டில் முடிந்தவரை பதிவு பண்ணியிருக்கேன். படத்துக்கு ரொம்ப முக்கியமான பாட்டு. இதை மெலடியா பதிவு பண்ணியிருக்கோம். மேலும் மூன்று படத்திற்கு உழைக்க வேண்டியதை இந்த ஒரு படத்திலேயே உழைத்து இருக்கேன் என்று சொல்லி முடித்தார் மிஸ்கின்.

Tags »
Myskkin, lyricst, mugamoodi, முகமூடி, மிஸ்கின், எழுதிய, சோக பாட்டு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in