விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! |
தமிழ் சினிமாவில் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. ஒருவார இடைவெளியில் வெளிவந்த நான் படத்தின் கதையும், 18 வயது படத்தின் கதையும் ஒன்றுதான். அம்மா, காம இச்சை அதிகமாகி கணவனை விட்டு இன்னொரு ஆணைத் தேடுகிறவர். இதை கண்டுபிடித்துவிடும் கணவன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகிறான். அப்பா மீது மிகுந்த பாசம் கொண்ட மகன் மனநோயாளியாகி, சைக்கோவாகி திரிகிறான். இதுதான் இரண்டு படத்தின் கதையும். நான் படத்தில் விஜய் ஆண்டனி அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார். அதேபோல 18 வயது படத்தில் ஜான் அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார். கொல்லும் விதம்தான் வெவ்வேறு. இரு படத்திலுமே ஹீரோக்கள் மனநோயாளியாக இருந்தாலும் நல்லவர்கள். என்னதான் கொலை செய்தாலும் நான் படத்தில் விஜய் ஆண்டனி எல்லா பிரச்னையிலிருந்தும் தப்பி தான் விரும்பியபடி டாக்டராகிவிடுகிறார். 18 வயது படத்தில் ஜானி தன் காதலியை கைபிடித்து விடுகிறார்.
இந்த கதை பஞ்சம் தொடருமா? நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு படங்களுமே ஹாலிவுட் படமான The Talented Mr Ripley என்ற படத்தின் காப்பிதான். தமிழில் ஏராளமான நல்ல நாவல்கள் வந்துள்ளன. சுஜாதா, சுபா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் மற்றும் பல எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்து படமாக்கினால் வணிக ரீதியாக வெற்றி கிட்டும் என்பதில் ஐயமில்லை.