ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ஜூஹி ஜாவ்லாவும், தற்போதைய ஹீரோயின் சோனாக்ஷி சின்காவும், விரைவில் வெளியாக உள்ள ஒரு இந்தி படத்தில், இணைந்து நடிக்கின்றனர். இருவருக்குமே, இந்த படத்தில் முக்கிய வேடம். இதன் படப்பிடிப்பு, சமீபத்தில் பஞ்சாபில் நடந்தது. வெளிப்புறப் படப்பிடிப்புகளில், நடிகர், நடிகைகள் தங்குவதற்கான கேரவன்கள், போதிய அளவில் கிடைக்காததால், ஜூஹி, சோனாக்ஷி ஆகிய இருவருக்கும், ஒரே கேரவனை ஒதுக்கி கொடுத்தனர். ஆரம்பத்தில் இருவருமே, சகஜமாக பழகி வந்தனர். ஆனால், கேரவனுக்குள், இவர்களுக்குள் என்ன மோதல் நடந்ததோ தெரியவில்லை. திடீரென, "ஜூஹியுடன், ஒரே கேரவனில் என்னால் தங்க முடியாது. எனக்கு தனியாக, ஒரு கேரவன் ஒதுக்குங்கள், என, தயாரிப்பாளரிடம் சீறினார், சோனாக்ஷி. ஜூஹியும், பதிலுக்கு எகிறவே, என்ன செய்வது என, தெரியாமல், தலையை பிய்த்துக் கொண்ட தயாரிப்பாளர், படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டார்.