ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷாம் சொந்தமாக தயாரித்து நடித்து வரும் படம் 6. 12பி-யில் அறிமுகமாகி நிறைய படத்தில் நடித்திருந்தாலும் முழு வெற்றியை இதுவரை ஷாம் சுவைத்ததில்லை. அதனால் எல்லோரையும் மிரள வைக்கும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. ஷாமின் நண்பர் வி.இசட் துரை ஒரு கதையோடு வந்தார். அந்த கதை பிடித்துவிட தானே தயாரிக்கவும் முடிவு செய்தார். இந்தப் படத்துக்காக தன்னை மிகவும் வருத்திக் கொண்டிருக்கிறார். தனது எடை, அழகு அத்தனையும் குறைத்து படத்துக்காக உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.
ஷாமின் கேரியரை தீர்மானிக்கப்போகும் படம் என்பதால் படத்திற்காக பல தியாகங்களை செய்து வருகிறார். கதைப்படி ஷாம் கொஞ்ச காலம் மனநலம் பாதித்தவராக அலைய வேண்டும். இதற்காக உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாற வேண்டும். இதே போன்ற ஒரு பணியை பேட்மேன், மெஷினிஸ்ட் படங்களில் நடித்த கிறிஸ்டியன் பாலே என்ற நடிகர் செய்திருந்தார். அவரை முன்மாதிரியாக கொண்டு ஷாமும் கடுமையாக உழைத்து மெலிந்திருக்கிறார். ஷாமை இப்போது நேரில் பார்ப்பவர்கள் அய்யோ பாவம் என்று சொல்லும் அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார். வெற்றி ஒன்றுதான் அவரது உழைப்புக்கான ஒரே பலன்.