வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில் அவரது உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படம் சுந்தரபாண்டியன். இதில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் முடிந்து விட்ட நிலையில் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் கார்த்திக் நடித்த ஒரு படமும் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. ஜூபிடர் பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ஆர்.ரகு என்பவர் இயக்கி உள்ளார். இரு படங்கள் ஒரே பெயரில் வெளிவருவது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
"சுந்தர பாண்டியன் தலைப்பு எங்களிடம்தான் உள்ளது. பல வருடத்துக்கு முன்பே அந்த தலைப்பை வைத்துவிட்டோம்" என்று ஜூபிடர் பிலிம்ஸ் தரப்பிலும், தலைப்பை அவர்கள் மறுபதிவு செய்யாததால் அது காலாவதியாகிவிட்டது. அந்த தலைப்பு யாரும் பதிவு செய்யவில்லை என்று உறுதி செய்த பிறகே நாங்கள் படத்துக்கு சுந்தர பாண்டியன் என்று தலைப்பு வைத்தோம்" என்று சசிகுமார் தரப்பிலும் கூறப்படுகிறது. பிரச்சினை இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கிறது. நாளை நீதிமன்றத்திற்கும் செல்லலாம்.