சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
வடிவேலு குழுவில் இருந்த காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி. சினிமாவில் புரொடக்ஷன் மானேஜராக பணியாற்றிய இவர் பின்னர் நடிகர் ஆனார். ஆனாலும் அவ்வப்போது புரொடக்ஷன் மானேஜர் பணியும் செய்வார். ஸ்ரீதரன் என்பவர் யாருக்குத் தெரியும் என்ற திகில்படத்தை தயாரிக்கிறார். இதை பெருசு படம் இயக்கிய காமராஜ் இயக்குகிறார். இது ஒரு திகில் கதை. திரைப்படம் தயாரிப்பு தொடர்பு அனுபவம் இல்லாத ஸ்ரீதரின் நண்பர் மூலம் அவருக்கு அறிமுகமானார் கிருஷ்ணமூர்த்தி. நானே குறைந்த செலவில் படத்தை முடித்து தருகிறேன். மொத்த பொறுப்பையும் என்னிடம் விட்டு விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை நம்பிய ஸ்ரீதரன் அவரிடம் மொத்த பொறுப்பையும் விட்டிருக்கிறார்.
படம் முடியும் தருவாயில் வாங்கிய பணத்துக்கு கணக்கு கேட்டிருக்கிறார் ஸ்ரீதரன். ஆனால் கிருஷ்ணமூர்த்தி கணக்கு காட்டாமல் நீங்கள்தான் எனக்கு 15 லட்சம் தர வேண்டும். நான் நீங்கள் கொடுத்து ப்ளைன் செக்கை கொடுத்து பைனான்சியரிடம் பணம் பெற்றிருக்கிறேன் என்று கூறியுள்ளார். கணக்கை தீவிரமாக கேட்டதும், எந்த பில்லும் இல்லாமல் வெற்று பேப்பரில் எழுதிக் கொடுத்திருக்கிறார். நடிக்காத நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்ததாகவும். எடுக்காத கேமராவுக்கு வாடகை கொடுத்தாகவும் கணக்கு கொடுத்துள்ளார். இப்படி போலியான கணக்கு காட்டி 20 லட்சம் வரை கிருஷ்ணமூர்த்தி மோசடி செய்துள்ளார்.
இந்த தகவல்கள் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் போலீஸ் துணை கமிஷனரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி புரொடக்ஷன் மானேஜர்கள் சங்கத்தில் ஸ்ரீதரன் மீது புகார் கொடுத்துள்ளார்.