சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது. 7 ஆம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இந்தியில் அறிமுகமான லக் படம் ஓடாததால் அங்கு மார்க்கெட் இல்லை. தற்போது பிரபுதேவா இயக்கும் புதிய இந்தி படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரபுதேவா இந்தியில் பிரபல இயக்குனராக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியில் தனது மார்க்கெட் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
இதுவரை ரூ.40 லட்சம், ரூ.60 லட்சம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது பலுபு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி, ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கிறார். கதாநாயகிகளுக்கு ரூ.1 கோடிதான் அதிகபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஸ்ருதி எட்டிப்பிடித்துள்ளதால் ஏற்கனவே ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வியப்பாகியுள்ளனர். நிறைய படங்களில் நடித்த பிறகே இந்த சம்பள நிலையை தொட முடியும். ஆனால் ஸ்ருதி குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களே ஹிட்டாகி உள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.