Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

பழம்பெரும் இந்தி நடிகர் ஏ.கே.ஹங்கால் மரணம்

A.K.Hangal passes awayஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஏ.கே.ஹங்கால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. 1917-ம் ஆண்டு பிறந்தவர் ஏ.கே.ஹங்கால்.  சிறுவயது முதலே தியேட்டர்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்த ஹங்கால், இந்தியா - பாகிஸ்தான் பிரிவுக்கு பின்னர் பெஷாவரில் இருந்து மும்பை வந்தார். தனது 50வது வயதில் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.1966ம் ஆண்டு தீஸ்ரி கஸம் எனும் படம் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்த ஹங்கால் தொடர்ந்து நமக் ஹாரம், ஷாகீன், ஸோலே, ஆயினா, அவ்தார், ஆந்தி, பலிகா பந்து, நரம் கரம் உள்ளிட்ட 225 படங்களில் நடித்துள்ளார். 1970-90களில் குணச்சித்திர வேடங்களின் மூடிசூடா மன்னனாக ஹங்கால் விளங்கினார். சினிமா மட்டுமல்லாது டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தனது மனைவி இறந்தபின்னர் மும்பையில் பிளாட் ஒன்றில் தனது மகன் விஜய் ஹங்காலுடன் வசித்து வந்தார் ஏ.கே.ஹங்கால். விஜய் ஹங்காலும்(வயது 75) பிரபல இந்தி சினிமா புகைப்பட க‌லைஞர் ஆவார். அவரது மனைவியும் இறந்துவிட்டார். அப்பாவும்-மகனும் பிளாட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஹங்காலுக்கு கடந்த 2007ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாதம் ஒன்றுக்கு மருத்துவ செலவுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் தேவைப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு பணம் செலவழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஹங்காலின் நிலைமை பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். மகாராஷ்டிரா முதல்வர் ப்ருத்விராஜ் சவான் ரூ.50 ஆயிரம் நிதியுதவி செய்தார்.

உடல்நலம் தேறிய நிலையில் சமீபத்தில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இத‌னையடுத்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஹங்கால் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் கவலைகிடமாக இருந்து வந்தநிலையில் இன்று(26.08.12) அவர் காலமானார். மறைந்த ஏ.கே.ஹங்காலுக்கு பாலிவுட்டின் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் ஹங்காலின் கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஹங்காலின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.

Tags »
A.K.Hangal, passes away, ஏ.கே.ஹங்கால், மரணம்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in