தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
ரூ.20 கோடி கடன் விவகாரத்தில் டைரக்டர் ராம் கோபால் வர்மாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலிவுட் டான்கள், பிரபல ரவுடிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து பரபரப்பான படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. இவர் பாலிவுட் பைனான்சியர் பரத் ஷாவிடம் ரூ.10 கோடி பைனான்ஸ் வாங்கி இருந்தார். பணத்தை உரிய நேரத்தில் திருப்பி தராததால் ரூ.10 கோடி கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.20 கோடி ஆனது. பலமுறை கேட்டும் வர்மா பணத்தை தராததால் இதுதொடர்பாக மும்பையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரத் ஷா புகார் அளித்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.
பிறகு இதுபற்றி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி தீர்த்துக்கொள்ளும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சங்கத்திற்கு வந்து விளக்கம் தரும்படி வர்மாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கமே வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.
இதுபற்றி வக்கீல் அதுல் மன்காம் கூறுகையில், ‘கடந்த ஆண்டு இப்பிரச்னையை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் வர்மா தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. இதையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி சங்கத்திற்கு அவர் நேரிலோ அல்லது அவரது பிரதிநிதியோ வந்து பிரச்னையை பேசி தீர்க்க கேட்கப்பட்டுள்ளது, என்றார்.