தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு சென்ற நடிகர் ஜெயராம் அங்கு சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார். மேலும் புத்தாடைகளும் வழங்கி அவர்களுடன் விளையாடினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புற்றுநோய் என்பது அணு அணுவாக மனித உயிர்களை சாகடிக்கும் கொடிய நோய் ஆகும். இதன் மூல காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரபலங்கள் முதல் சிறு குழந்தைகள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடை பிணங்களாக வாழ்வது பரிதாபத்துக்குரியதாகும். புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளேன். திருவனந்தபுரம் புற்றுநோய் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினேன். எந்த பாவமும் அறியாத அக்குழந்தைகளின் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்கின்றபோது கவலை நம்மை குடிக்கொள்கிறது, என்றார்.
ஜெயராமின் இரக்க குணத்துக்கு பாராட்டுக்கள், அதைவிட முக்கியம், அவர் நடிக்கும் எல்லா படங்களிலும், குறிப்பாக மலையாள சினிமாக்களில் தண்ணி அடி,சிகரட் குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்து இளைய தலைமுறய கெடுத்திருக்கிறார். இனிமேலாவது mgr போல சினிமாவில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று புற்று நோய் நோயாளிகளின் அன்புக்காவது சபதம் செய்வாரா ? அபுதாபியிலிருந்து கணேஷ்