Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.எஸ்.விஸ்வநாதன்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் தில்லுமுல்லு...!!

22 ஆக, 2012 - 11:01 IST
எழுத்தின் அளவு:

கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான படம் "தில்லு முல்லு". வித்தியாசமான கதாபாத்திரத்தில் இரட்டை வேஷம் போட்டுக்‌கொண்டு காமெடியில் அசத்தியிருந்தார் ரஜினி. முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தப்படம் அதேப்பெயரில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ரஜினியாக தமிழ்படம் சிவா நடிக்க, அவருக்கு ஜோடியா இஷா தல்வார் நடிக்கிறார். "வீராப்பு", "தம்பிக்கு எந்த ஊரு" படங்களின் டைரக்டர் பத்ரி இயக்குகிறார். வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் பெரிய ‌ஹைலைட்டாக முன்னாள் மற்றும் இந்நாள் இசையமைப்பாளர்கள் இருவர் சேர்ந்து இசையமைக்க உள்ளனர். அதில் ஒருவர் தமிழ் சினிமாவிற்கு காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்த மெல்லிசை மன்னர் ‌எம்.எஸ்.விஸ்வநாதன். மற்றொருவர் தற்போது பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன்சங்கர் ராஜா. முன்னதாக இதேப்போல் 1986-ல் ஏ.வி.எம்.மின் தயாரிப்பில் வெளிவந்த மெல்ல திறந்தது கதவு படத்திற்காக, எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றினர். அவர்கள் கூட்டணியில் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

இப்போது அதேப்போல் எம்.எஸ்.வி.யும், இளையராஜாவின் வாரிசும் இணைந்து பணியாற்ற இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒருவித பரபரப்பையும், அதேசமயம் ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. வெண்ணிலா கபடிக்குழு லஷ்மண் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். ஆகஸ்ட் 24ம் தேதி படத்தின் பூஜை ஆரம்பமாகி தொடர்ந்து ஷூட்டிங் செப்டம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

உதயன் - Toronto,கனடா
24 ஆக, 2012 - 23:24 Report Abuse
 உதயன் எண்பதுகளில் வெளிவந்த படங்களில் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மனதை விட்டகலாத இசைக் காவியங்கள். அவரின் அற்புதமான படைப்பில் அன்று வெளிவந்த தில்லு முல்லு பட பாடல்கள் அருமையிலும் அருமை. அவற்றில் ராகங்கள் பதினாறு பாடல் காலத்தால் அழிக்க முடியாத மிகச் சிறந்த பாடல். புதிய தில்லுமுல்லு படத்திலும் மெல்லிசை மன்னர்-யுவன் சங்கர் கூட்டணி தித்திக்கும் முத்தான புதிய தலைமுறை பாடல்களை தந்திட வேண்டும்.
Rate this:
Felix - bangalore,இந்தியா
23 ஆக, 2012 - 01:06 Report Abuse
 Felix தனுஷ் should act in the movie which will be more apt for the role:)
Rate this:
christ - chennai,இந்தியா
22 ஆக, 2012 - 13:25 Report Abuse
 christ என்னதான் சொன்னாலும் பழசு என்றைக்கும் மென்மைதான் !! ஆன புதுச உள்ள சேக்கும் பொழுது தான் பழசு சோட மென்மை போய்ருமோ என தோணுது ?
Rate this:
ssmanian - Erode,இந்தியா
22 ஆக, 2012 - 13:22 Report Abuse
 ssmanian எந்த விதமான ஈகோவும் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மாமனிதர் எம். எஸ்.வி . அவர்கள் இந்த மாதிரி இணைய மனது ஒரு ஸ்தித ப்ரஞன் நிலையில் இருந்தால்தான் முடியும். அவர் பனி சிறக்க எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in