இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடவே முடியாது என்று பாலிவுட் நடிகை சோனாஷி சின்ஹா கூறியுள்ளார். நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் ஓ மை காட் படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் சோனாக்ஷி. அதாவது அவரும் பிரபுதேவாவும் இணைந்து கோ கோ கோவி்ந்தா என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.
பிரபுதேவாவுடன் ஆடிய அனுபவம் குறித்து சோனாக்ஷி கூறுகையில், பிரபுதேவா சார் நமக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் ஜாலியாக சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்தால் போதும். ஆனால் அவர் நம்முடன் சேர்ந்து டான்ஸ் ஆட வந்து விட்டால் நாம் செத்தோம். அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர். அவருடன் இணைந்து ஆடுவது என்பதை நினைத்தாலே நடுங்கிப் போய் விடும். இருந்தாலும் அவருக்கு இணையாக ஓரளவுக்காவது ஆடினால்தான் நாம் பிழைத்தோம். அவருடன் இணைந்து ஆடும்போது தானாகே நமது டான்ஸும் சிறப்பாக மாறி விடுகிறது, என்றார் சோனாக்ஷி.