‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் வசூல் ராஜா ஷாரூக் கானுக்கு, ஆர்யான் என்ற மகனும், சுகானா என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் மீது, மிகுந்த பாசம் வைத்துள்ள ஷாரூக்கிற்கு, அவர்களுக்காக போதிய நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உண்டு. "குழந்தைகள் மீது, இவ்வளவு பாசமா என, அவரிடம் கேட்டால்," கடந்த 20 ஆண்டுகளாக நடித்து வந்தாலும், திரைப்படத் துறையில், எனக்கென நெருங்கிய நண்பர்கள் என, யாரும் கிடையாது. என்னுடைய குழந்தைகளே, என் நண்பர்கள். அவர்களுடன் இருக்கும்போது, நான் ஒரு மிகப் பெரிய நடிகர் என்பதையும், 50 வயதை நெருங்கிய நபர் என்பதையும் மறந்து விடுகிறேன். பத்து வயதுச் சிறுவனைப் போல் மாறி விடுகிறேன். அவர்களுடன் செலவிடும், ஒவ்வொரு நிமிடமும், என் வாழ்நாளின் மறக்க முடியாத தருணங்கள்என, உணர்ச்சிவசப்படுகிறார்.