Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மானேஜர் வைத்துக் கொள்ள மலையாள நட்சத்திரங்களுக்கு தடை!

Malayalam producer council ban to appoint manager for cinema stars
மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகள் மானேஜர்கள் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மானேஜர்கள் நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் 15 சதவீதத்தை சம்பளமாக பெற்று வந்தனர். அந்த பணத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்தே நடிகர்கள் வாங்கி கொடுத்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். மானேஜர்களுக்கு கமிஷன் கொடுக்காதவர்களின் படங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. படப்பிடிப்புக்கு போகாமல் வேண்டும் என்றே தாமதம் செய்தனர்.

சமீபத்தில் பத்மப்ரியாவும் இதுபோல் தொந்தரவு கொடுத்தார். நம்பர் 66 மதுரை பஸ் என்ற மலையாள படத்தில் பத்மப்ரியா நடிக்கிறார். நிஷாத் இப்படத்தை இயக்குகிறார். படத்தை முடித்து கொடுப்பதற்கு பத்மப்ரியா தனது மானேஜருக்கு கொடுக்க கூடுதல் பணம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக இயக்குனர் புகார் கூறினார். தயாரிப்பாளர் சங்கத்திலும் பத்மப்ரியா மீது புகார் மனு அளிக்கப்பட்டது.  இதுகுறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் மானேஜர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. சம்பள விஷயங்கள் குறித்து நடிகர் - நடிகைகளிடம் நேரில்தான் பேசவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags »
மானேஜர், வைக்க, மலையாள, நட்சத்திரங்களுக்கு, தடை,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in