Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நான் ரொமாண்டிக் டைப்! - சொல்கிறார் தன்வி!!

I am romantic type says thanvi vyas5.8 அடி உயரம், மெலிந்த தேகம், பேசும் கண்கள், பேச வைக்கும் முகம், 2008-ல் மிஸ் இந்தியா பட்டம், அதன்பிறகு மாடலிங் என்று கலக்கியவர் நடிகை தன்வி வியாஸ். குஜராத்தில் பிறந்து பம்பாயில் வசிக்கும் தன்வியின் குடும்பமே டாக்டர் தொழில் செய்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். பேஷன் ஷோ, விளம்பரங்கள் என்று எப்போதும் பிஸியாக இருந்த இவரை எப்படியோ, எப்படி மனசுக்குள் வந்தாய் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்திருக்கிறார் டைரக்டர் பிரசாத். சரி அவரைப்பற்றிய அறிமுகம் போதும், இனி அவர் என்ன சொல்கிறார் கேட்போம்...

தன்வி என்றால் உயர்ந்த பெண்மணி என்று அர்த்தம். என் பாட்‌டி வைத்த பெயர். எனக்கு அப்படியே பொருத்தமா அமைந்துவிட்டது. என் குடும்பத்தில் எல்லோரும் டாக்டராக இருப்பதால் இந்த துறைக்கு நான் மட்டும் புதிது. கிராபிக்ஸ் டிசைனராக நான் உள்ளேன். முதலில் தமிழ் படத்தில் அறிமுகமானது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. எனக்கு தமிழ் படங்கள் பற்றி எதுவும் தெரியாது. தமிழ் படங்களில் நான் கமிட் ஆனதும் தான் நிறைய படங்களை பார்க்க ஆரம்பித்தேன். சென்னை இட்லி, தோசை எனக்கு ரொம்ப பிடிக்கும். மும்பையில் இருக்கும் போது நானே சமைப்பேன். பழகுற வரைக்கும் யாருகிட்டேயும் அவ்வளவா பேசமாட்டேன். அந்தளவுக்கு நான் ரொம்ப அமைதியான பொண்ணு. அதேசமயம் நான் ரொம்ப ரொமாண்டிக் டைப். எதுக்கும் டென்ஷன் ஆக மாட்டேன். தமிழில் ஒரு படம் நடித்த பிறகு இப்ப நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். சீக்கிரம் நல்ல நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம் என்று புன்னகையோடு பேசி முடித்தார் தன்வி.

Tags »
thanvi vyas, தன்வி வியாஸ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

அறிக்கை அண்ணாச்சி - iruttukadai alva kurukku theru,இந்தியா
2012-08-13 13:02:41 Report Abuse
 அறிக்கை அண்ணாச்சி அத நீ சொல்ல கூடாது.உன் கூட பழகி நான் சொல்லனும்.ரெடியா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in