பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதுமுக இயக்குனர் எஸ்.நாகராஜன் இயக்கும் படம் இது சாருவோட டேட்டிங். இதில் கேரளாவைச் சேர்ந்த மாடலிங் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக குஜராத் படங்களில் நடித்து வரும் ஸ்வப்னா அறிமுகமாகிறார். இயக்குனர் ஜி.எம்.குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது சென்னையில் அதிகரித்து வரும் டேட்டிங் கலாச்சாரத்தை பற்றிய கதை. டைட்டல் பார்க்கிலிருந்து பாண்டிச்சேரிக்கு டேட்டிங் கிளம்பும் ஒரு பெண்ணும், ஆணும் கிழக்கு கடற்கரை சாலையில் அனுபவிக்கும் கொடூர சம்பவங்கள்தான் கதையாம்.
"இந்தப் படத்துக்காக பல இடங்களில் ஹீரோயின் தேடியபோதும் கிடைக்காத நிலையில் தற்செயலாக இணையதளத்தின் மூலம் கிடைத்தவர்தான் இந்த ஸ்வப்னா. அவர் நடித்த படங்களின் டி.வி.டியை அனுப்பி வைத்தார். பிடித்திருக்கவே அவரை ஹீரோயின் ஆக்கிவிட்டோம்" என்று ஹீரோயின் கிடைத்த தகவலைச் சொல்கிறார் இயக்குனர் நாகராஜன். டேட்டிங் என்பதற்கு சரியா தமிழ் வார்த்தை கிடைக்காததால் ஆங்கிலத்தை அப்படியே தலைப்பில் பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்.