'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இவரது சார்பில் இவரது மகன் முக்தா ஆர்.கோவிந்தும். மருமகள் பிரிதரிஷின் கோவிந்தும் இணைந்து தயாரிக்கும் படம் சிவப்பு. கழகு படத்தை இயக்கிய எஸ்.சத்யசிவா இயக்குகிறார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கில் சமீபத்தில் அறிமுகமான நவீன் சந்திரா ஹீரோ. ரூபா மஞ்சரி ஹீரோயின். கழகு கொடைக்கானல் மலையில் தற்கொலை செய்து கொள்பவர்களின் உடல்களை மீட்கும் மக்களின் வாழ்க்கையை சொல்லியதைப்போன்று, சிவப்பு கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்கிறதாம். சத்யராஜும், செல்வாவும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.