Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மலையாள படம் தயாரிக்கிறார் ரசூல் பூக்குட்டி!

Resul pookutty to produs  Malayalam film!
ஆஸ்கார் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி மலையாள படம் தயாரிக்கிறார். இந்திய சினிமாவின் பிரபல ஒலிப்பதிவாளர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. இவர் ஸ்லெம் டாக் மில்லினர் என்ற படத்துக்கு சிறந்து ஒலிப்பதிவு செய்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார். மலையாள பட உலகில் முன்னணி ஒலிப்பதிவாளராக திகழும் ரசூல் பூக்குட்டி தற்போது சொந்தமாக மலையாள படம் தயாரிக்கிறார். ஐடி என்ற பெயரில் தயாராகும் இப்படத்தில் பூனே பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முடித்தவர்கள் நடிக்கிறார்கள்.

இன்றைய இளைஞர் சமுதாயம் சுய முகவரி இன்றி சூழ்நிலைகளுக்கேற்ப தடுமாறி கொண்டு இருக்கிறது. அவர்களின் சரியான தடம் எது என்பதை காட்டும் விதமாக ஐடி படம் அமையும். காலத்துக்கேற்ற கதையை கேட்டதும் எனக்கு பிடித்துப் போனது. எனவே நானே ஐடி படத்தை தயாரிக்க எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

Tags »
மலையாள, படம், தயாரிக்கிறார், ரசூல் பூக்குட்டி, Resul pookutty, to, produs, Malayalam film,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in