Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவின் பிஸி பாடலாசிரியர் மதன்கார்கி...!!

madhan karky so busy in Cinemaஇன்றைய தேதியில் சினிமாவில் ரொம்ப பிஸியான பாடலாசிரியர் யார் என்றால் நிச்சயம் அது மதன் கார்கி தான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான கார்கி, "கண்டேன் காதலை" படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான கார்கி, பின்னர் எந்திரன் படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புது சிந்தனைகளோடும், புதுப்புது வரிகளோடும் தமிழ் சினிமாவில் நம் அனைவரின் இதயத்தில் நிற்கிறார். கோ படத்தில் அவர் எழுதிய என்னமோ ஏதோ, ஏழாம் அறிவில் சீன மொழிப்பாடல், நண்பனில் அஸ்க் அஸ்க்... உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்ப‌ோது நான் ஈ படத்தில் எல்லா பாடல்களையும் இவரே எழுதி ராஜமவுலியின் மொத்த பாராட்டையும் பெற்றுள்ளார். அந்த வேகம் குறைவதற்குள், இதோ அவரது வரிகளில் ஏகப்பட்ட படங்கள் வர இருக்கின்றன. அவற்றுள் துப்பாக்கி, மாற்றான், கடல், நிமிர்ந்து நில், முகமூடி, ஐ, ஒரே ஞாபகம் என்று கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர நிறைய படங்களுக்கும் பாடல் வரிகள் எழுத கமிட் ஆகி இருக்கிறார். அமைதியின் உருவமாய், அழகான வரிகளின் உயரமாய் விளங்கும் மதன் கார்கி விரைவில் தனது 50வது பாடல் நெருங்குவார் எனத் தெரிகிறது.

வாழ்த்துக்கள் கவிஞரே...!

Tags »
madhan karky, மதன் கார்கி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (11)

priya - chennai,இந்தியா
2012-08-10 22:40:58 Report Abuse
 priya i like u karki .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கருபனசாமி - Kaariyaapatti ,கஜகஸ்தான்
2012-08-08 18:36:16 Report Abuse
 கருபனசாமி கார்கில இம்புட்டு விஷயம் இருக்க நாந்தேன் இன்னும் கரிசல் காட்டு வெள்ளந்தி பய புள்ளையா திரியிரேனா சரி இப்போ புரிஞ்சிபோச்சு நண்பர்களே நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ganesh - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-08-07 11:18:59 Report Abuse
 ganesh திறமைக்கு பாராட்டுக்கள்.தமிழில் ஊறிய தமிழ் குடும்பத்தில் பிறந்த மகனுக்கு ஏன் தமிழ் பெயர் கிடைக்கவில்லை?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பென்னெட் ராஜ் - jubail,சவுதி அரேபியா
2012-08-07 10:34:55 Report Abuse
 பென்னெட் ராஜ் மார்சிம் கார்கி என்ற ரஷ்ய எழுத்தாளரின் பெயரின் ஒரு பகுதி தான் நம் கவிஞரின் பெயர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ம.மகாலிங்கம் - Brisbane,ஆஸ்திரேலியா
2012-08-07 08:54:55 Report Abuse
 ம.மகாலிங்கம் காரியாபட்டி நண்பரே , கார்கி என்றால் ஒரு ரஷ்ய நாட்டு கவிஞரின் பெயர் என்பதாகும் , திரு. வைரமுத்து அவர்கள் மதன் என்ற தன் தவப்புதல்வனுக்கு கார்கி என்ற பெயரையும் சேர்த்து பெருமைப்படுத்தியுள்ளார், ரஷ்ய கவிஞரை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in