Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி மணிமண்டபம்: ரசிகர்கள் ஆதங்கம்

06 ஆக, 2012 - 09:40 IST
எழுத்தின் அளவு:

நடிகர் திலகம் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்தது. இதனால் அரசு, அடையார் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரிக்கு எதிரில் உள்ள இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அதற்கு இடம் ஒதுக்கியது. திரையுலகமே திரண்டு அதற்கு பூமி பூஜையெல்லாம் போட்டார்கள். ஆனால் அதன் பிறகு அதனை அப்படியே கிடப்பிலும் போட்டு விட்டார்கள். தி-.மு.கழக தலைவர் கருணாநிதி சிவாஜிக்கு காமராஜர் சாலையில் சிலை வைத்ததோடு நன் நண்பனுக்கு இதுவே பெரிது என்று மணி மண்டபம் பற்றி கண்டு கொள்ளவே இல்லை. மணி மண்டம் உடனே கட்ட வேண்டும் என்று நடிகர் சங்கமோ, அல்லது சினிமாவின் இதர அமைப்புகளோ இதுவரை குரல் கொடுக்கவில்லை. தங்கள் பிரச்சினைகளை மட்டும் அரசிடம் பேசி தீர்த்துக் கொண்டனவே தவிர சிவாஜி மணிமண்டபம் பற்றி வாய் திறக்கவே இல்லை. இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அதன் பிறகு போடப்பட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்க, சிவாஜி மணிமண்டபத்துக்கு ஒதுக்கிய இடம் மட்டும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்ணன் பட 150வது நாள் விழாவில் ரசிகர்களின் மனக்குமுறல் வெடித்தது. காமராஜர் அரங்கத்தில் இந்த விழா நடந்தது. இதில் பேசிய இயக்குனர்கள், சிவாஜி ரசிகர் மன்ற பிரமுகர்கள், பி.வாசு உள்ளிட்ட இயக்குனர்கள் தங்கள் மனக்குமுறலை மேடையில் கொட்டியபோது "ரசிகர்கள் அரசே சிவாஜி மணிமண்டபத்தை உடனே கட்டு" என்று கோஷமிட்டனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி இறுதியில் பிரபு பேசும்போது வருத்தம் தொணிக்க தனது ஆதங்கத்தை வெளியிட்டார். "அப்பா சிவாஜிக்கு இன்னும் மணிமண்டபம் கட்டவில்லையே என்று சிலர் இங்கு ஆதங்கத்தோடு பேசினார்கள். ரசிகர்களும் தங்கள் ஆதங்கத்தை பிரதிபலித்தார்கள். அப்பாவுக்கு நான் நினைத்தால் என்னுடைய பணத்தை போட்டு மணி மண்டபம் கட்டிவிட முடியும். ரசிகர்களாக நீங்கள் நினைத்தாலும் பணம்போட்டு கட்டிவிட முடியும். ஆனால் பெரியவர்கள்தான் (அரசாங்கம்) கட்ட வேண்டும். அதுதான் அப்பாவுக்கான அங்கீகாரம், அதுதான் அவருக்கு கிடைக்கும் மரியாதை. அது சீக்கிரம் நடக்கும், நடக்க வேண்டும் என்று உங்களைப்போல நானும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

இதே மேடையில் பிரபு இன்னொரு ரகசியத்தையும் சொன்னார். "சிவாஜி தேர்தலில் போட்டியிட்டபோது திருவையாறு தொகுதியில் நாங்கள் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். அவரை தோற்க விட்டிருக்ககூடாது" இரண்டு பேர் பிரபுவிடம் ஆதங்கப்பட்டு, வருத்தப்பட்டு சொன்னார்களாம். அது ரஜினியும், கமலும். இதை மேடையில் பிரபு சொன்னபோது "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?" என்று ஒரு ரசிகர் அரங்கத்தில் கத்தினர்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சிவாஜியை இன்னும் அவரது தீவிர ரசிகர்களும், அன்னை இல்லமும் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் அந்த மாபெரும் கலைஞனை மறந்து விட்டார்கள். எந்த நடிகர் சங்கத்தை சிவாஜி கட்டிக் காத்தோரோ அந்த நடிகர் சங்கம் உள்பட.

"அண்ணே இன்னும் ஒரு வருஷம் பார்ப்போம்ணே அரசாங்கம் மணி மண்டபம் கட்டலேண்ணா நாம நம்ம ஊர்லேயே அண்ணனுக்கு கட்டிருவம்ணே" என்றபடியே கலைந்தனர் ரசிகர்கள். காலத்தை கடந்து சிவாஜியை சுமந்து சென்று கொண்டிருப்பவர்கள் இந்த ரசிகர்கள்தான். 

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

R.ARIVALAGAN - doha,,QATAR,இந்தியா
08 ஆக, 2012 - 04:52 Report Abuse
R.ARIVALAGAN சிவாஜி கணேசனால் நல்ல தமிழ் கற்றுக்கொண்டேன் வாழ்க அவர் புகழ். ரா.அறிவழகன் வண்டுவான்சேரி,கும்பகோணம்.
Rate this:
கோபி - chennai,இந்தியா
07 ஆக, 2012 - 12:17 Report Abuse
 கோபி அவரு தமிழ்நாடு மக்களுக்கு என்ன சாதனை செஞ்சாரு எதுக்கு அவருக்கு மணி மண்டபம் இப்படி கட்ட நினைத்தால் கமல் ரஜினி எல்லாருக்கும் kattanum
Rate this:
Oruvan - Toronto,கனடா
06 ஆக, 2012 - 21:53 Report Abuse
 Oruvan சிவாஜி நடிப்புக்கு இணை கிடையாது அரசு ஏன் மக்கள் வரிபணத்தில் கட்ட வேண்டும்-சிவாஜியை விட கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் நடிகைகள் சேர்ந்து செய்யவேண்டும்
Rate this:
நகை நல்லூரன் - salem,இந்தியா
06 ஆக, 2012 - 20:16 Report Abuse
 நகை நல்லூரன் சிலை வெச்ச வரைக்கும் போதும். அதுவே பெரிய அங்கீகாரம்தான். பொது மக்கள் எல்லாம் 800 சதுரடி வீடு வாங்க அல்லல் படுதுங்க. இதுல ஒரு நடிகருக்கு ஏகப்பட்ட ஏக்கர்ல மணி மண்டபமா. இதுல தமிழ் நாட்டுல தமிழனுக்கு அங்கீகாரம் கிடைக்கலையாம். தமிழ் நாட்டுல தமிழனுக்கு குடிக்க தண்ணி இல்லை, இருக்க இடம் இல்லை, அங்கீகாரம் மட்டும் என்ன வாழுதாம். வேணும்னா நடிகர் சங்கம் அரசாங்கத்துக்கு பணம் குடுத்து நிலத்தை விலைக்கு வாங்கி சொந்த பணத்தில் மணி மண்டபம் கட்டட்டும். அதை இலவச என்ட்ரி கொடுத்தால் நாங்கள் போய் பார்த்து விட்டு வருவோம். அவ்வளவுதான்
Rate this:
அவ்வை ஷண்முகி - sinagpur,சிங்கப்பூர்
06 ஆக, 2012 - 19:24 Report Abuse
 அவ்வை ஷண்முகி தமிழன இனியும் திருத்த முடியாதுன்னு இத வெச்சே சொல்லிடலாம். சிவாஜி நல்ல நடிகர் தான்...அதை பாரு, ரசி பொழப்ப பாரு. அதை விட்டு மணி மண்டபம், பவழ விழா, இதெல்லாம் தேவை தானா?? அவரால் நாட்டுக்கு என்னப்பா நன்மை? வீரபாண்டியன் குடும்பம் தெருல நிக்குது. வீரபண்டியனா நடிச்சவருக்கு இவள்ளவு செலவு தேவை தானா...சிந்திக்கவே மாடீங்களா??!!
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in