Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் மோதல்!

05 ஆக, 2012 - 09:35 IST
எழுத்தின் அளவு:

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு துணை தலைவர் டி.சிவா ஆகியோர் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியிலும், துணை தலைவர் சத்யஜோதி தியாகராஜன் செயலாளர் முரளிதரன் இன்னொரு அணியிலுமாக இருக்கிறார்கள். முக்கிய தயாரிப்பாளரான கே.ஆர் தலைமையில் இந்த அணியினர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு அவருக்கு எதிராக அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைத்து சங்கத்தை கைப்பற்றி நிர்வாகம் செய்ய ஆரம்பித்தனர். இதை எதிர்த்து எஸ்.ஏ.சந்திரசேகரன் நீதி மன்றத்துக்குச் சென்றார். வழக்கை விசாரித்த நீதி மன்றம். அட்ஹாக் கமிட்டி செல்லாது என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதனால் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து சங்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எஸ்.ஏ.சிக்கு எதிர் அணியினர் மீண்டும் கொடிபிடிக்கத் தொடங்கி உள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதி மாலை சங்கத்தில் கூடிய எதிர்ப்பு அணியினர் பெப்சி அமைப்புடன் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை முடிக்கவில்லை, சங்கத்தின் உதவிகள் பாரபட்சத்துடன் வழங்கப்படுகிறது, வரசெலவு கணக்குகள் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு ஆதராக 212 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் அணியினர் கூறும்போது. "சங்கத்தின் பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சங்கத்தில் கடந்த காலத்தில் ஏராளமான  போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவற்றை கண்டறிந்து வருகிறோம். இதுவரை 120 போலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அதுபற்றி முறையாக அறிவிக்க இருக்கிறோம். அந்த போலி உறுப்பினர்கள்தான் இப்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பிரச்சினையை கிளப்புகிறார்கள். அவர்கள் அமைதியாக இருக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் செல்ல தயங்க மாட்டோம்" என்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் அதிகார மோதல் எப்போதுதான் முடிவுக்கு வருமோ என்பதுதான் சங்க உறுப்பினர்களின் கவலையாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

கிழவன் - chennai,இந்தியா
07 ஆக, 2012 - 09:10 Report Abuse
 கிழவன் நாராயணா இந்த கொசு தொல்ல தாங்கலடா அடிச்சு வெரட்டு டா, மன்னிச்சிகோங்க தமிழ்நாட்டின் வருங்கால "துணை முதல்வரை" பத்தி தப்பா பேசிட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!
Rate this:
rudder - Chennai  ( Posted via: Dinamalar Android App )
07 ஆக, 2012 - 00:27 Report Abuse
rudder sac unaku vera velai illaya
Rate this:
சக்திவேல் - slave lake,கனடா
06 ஆக, 2012 - 11:54 Report Abuse
 சக்திவேல் எஸ் ஏ சி ரொம்ப நல்லவரு . அதனால்தான் அவரு தலைவர ஆனாரு .
Rate this:
லொள்ளு லோகு - new delhi,இந்தியா
06 ஆக, 2012 - 03:25 Report Abuse
 லொள்ளு லோகு இந்த எஸ்.ஏ.சி. ஒரு காமெடி பீஸ்.
Rate this:
அஸ்வந் - Chennai,இந்தியா
05 ஆக, 2012 - 18:38 Report Abuse
 அஸ்வந் First send this flop actor vijai father out of the show, then every thing will be ok.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in