ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் | அரசியலில் திவ்யா செல்வாக்கு கிடு கிடு | கத்தி, கம்பு, அரிவாளை இனி எடுக்க மாட்டேன்: சசிகுமார் உறுதி | நட்புக்காக நடிக்கும் வடிவேலு | விரைவில்..."கன்சக்கர் | மாமனார், மாமியார் ஓ.கே.,சந்தோஷத்தில் சமந்தா | தண்ணீர் வரி கட்டாமல் தண்ணி காட்டிய தியா | சந்தானத்தையே கலாய்க்கும் ஹீரோக்கள்! | பின்வாங்கியது மரியான்! | பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கிறார் டி.ஆர்.,! |
தங்கர் பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அவரே தயாரித்து இயக்கும் புதிய படம் அம்மாவின் கைபேசி. இதில் கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவும், வாகைசூடவா இனியாவும் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். ஒரு கிராமத்து தாய்க்கு 8 மகன்கள், அதில் 6 பேர் திருமணம் செய்து கொண்டு நகர்புறங்களில் செட்டிலாகிவிடுகிறார்கள். கடைசி மகன் அம்மாவுடனேயே கிராமத்தில் இருக்கிறார். இன்னொரு மகன் பொறுப்பில்லாம் சுற்றிக் கொண்டிருக்கிறார். இவர்கள் அனைவரையும் இணைப்பது அம்மாவிடம் இருக்கும் கைபேசிதான். எல்லோரும் அம்மாவை கைவிட்டுவிட கடைசி செல்ல மகன் சாந்தனுதான் அம்மாவை கடைசிவரை காப்பாற்றுபவர். இவர்கள் எல்லோரையும் விட ஊதாரியாக திரியும் மகன் செய்யும் காரியம்தான் படத்தின் முக்கிய அம்சம்.
இதில் தங்கர் காக்கும் ரகசியம் என்ன தெரியுமா. அந்த ஊதாரி மகனாக நடித்திருப்பது அவர்தான். அதை இதுவரை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார். செப்டம்பர் மாதம் படம் வெளிவருகிறது.