Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

லட்சுமிராய் கேரக்டரில் திருநங்கை ரோஸ்

Rose in lakshmi rai role
       பிரபல திருநங்கை ரோஸ். அமெரிக்காவில் படித்த இவர் திருநங்கைகளுக்காக பல சமூக சேவைகளை செய்து வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த ரோஸ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகவும் பணியாற்றி வந்தார். தற்போது ரோஸ் திரைப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். ஆங்கிலத்தில் அவர் இயக்கும் படத்திற்கு கிரிக்கெட் ஸ்கேண்டல் என்று பெயரிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் மேக்ஸ் பிக்சிங், சூதாட்டம், வீரர்களுக்கும் பெண்களுக்குமான தொடர்பு ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்குகிறார். இயக்குவதோடு அவரே நடிக்கவும் செய்கிறார்.

நடன மங்கை கேரக்டரில் நடிக்கும் அவர் கிரிக்கெட் அணியின் கேப்டனை காதலிப்பது போலவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர் சந்திப்பது போலவும் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இது நடிகை லட்சுமிராயை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கேரக்டர் என்று கூறப்படுகிறது. நடிகை லட்சுமிராய், கேப்டன் டோனி மற்றும் ஸ்ரீசாந்த், யுவராஜ் ஆகியோருடன் நெருங்கிய நட்பாக இருந்தது அனைவருக்கும் தெரியும்.

இதுகுறித்து ரோஸிடம் கேட்டால். "அதுபற்றி இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது. படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்" என்றார். மேலும் அவர் கூறும்போது. "படப்பிடிப்பு சென்னையிலும், இலங்கை தலைநகர் கொழும்புவிலும் நடக்கிறது. கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த முறைப்படி அனுமதி கோரி உள்ளேன். கிரிக்கெட் இந்திய இளைஞர்களின் லட்சிய விளையாட்டு. அதனை அவர்கள் தங்கள் உயிருக்கும் மேலாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த விளையாட்டில்தான் அத்தனை முறைகேடுகளும் நடக்கிறது. அதை வெளி உலகத்துக்கு கொண்டு வரும் முயற்சிதான் இது. உலக மக்கள் அனைவரின் பார்வைக்கும் கொண்டு செல்வதற்காகத்தான் ஆங்கிலத்தில் இயக்குகிறேன். இந்தப் படத்திலேயே திருநங்கைகளுக்கும் கிரிக்கெட்டுக்குள் உள்ள ஒரு ரகசிய உறவையும் சொல்லப் போகிறேன் என்கிறார்.

Tags »
Rose, lakshmi rai, role, லட்சுமிராய், கேரக்டரில், திருநங்கை ரோஸ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

விக்னேஷ் sendhil - mdu,இந்தியா
2012-08-17 10:50:37 Report Abuse
 விக்னேஷ் sendhil pudikala
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஞானி - chennai,இந்தியா
2012-08-03 15:11:56 Report Abuse
 ஞானி ரகுராம், rose பத்தி என்ன தெரியும். சும்மா கமெண்ட் அடிக்கணும்னு அடிக்காதே.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
ரகுராமன் - chennai,இந்தியா
2012-08-02 16:22:42 Report Abuse
 ரகுராமன் இவலே ஒழுங்கு கிடையாது. உன்னதமான நட்ப சொல்ல போறாளாம்.... கழுதை
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
பிரியா - MADURAI,இந்தியா
2012-08-02 16:21:22 Report Abuse
 பிரியா ALL THE VERY BEST ROSE
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
pushpa - chennai,இந்தியா
2012-08-02 10:12:17 Report Abuse
 pushpa all the very best
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in