சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
கன்னியாகுமரியிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் நர்மதை நதி தீரம் வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலை. இதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ அமைப்பு. இனி முல்லை பெரியாற்றில் கேரளா அணைகட்டுவது இயலாது காரியம் என்பதைப்போல இனி அடர்ந்த மலைக் காடுகளில் படப்பிடிப்பு நடத்துவதும் சிக்கலான விஷயமாகியிருக்கிறது.
முன்பெல்லாம் பாடல் காட்சிகளுக்காக மலைவாசஸ்தலங்களை நோக்கிச் செல்வார்கள். அதுவும் அடர்ந்த காட்டுக்குள் செல்வதில்லை. இப்போது அடர்ந்த காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்துவது பேஷனாகிவிட்டது. மணிரத்னம் ராவணன் படத்தை காட்டுக்குள் எடுத்தார். காட்டுக்குள் எடுக்கப்பட்ட மைனா வெற்றி பெற்றது. இதனால் காட்டுக்குள் படம் எடுக்கும் காய்ச்சல் எல்லோருக்கும் வந்து விட்டது. இன்றைய தேதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட படங்கள் காட்டுக்குள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் இனி வனஇலாக அதிகாரிகள் கட்டிங் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்து விட முடியாது. யாராவது ஒருவர் கோர்ட்டுக்குச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியது வரும். யுனெஸ்கோ அமைப்பின் கவனம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது இருக்கும் என்பதால் எந்த அசைவும் அவர்களுக்குத் தெரிந்து விடும். அதோடு புலிகள் சரணாலயத்திற்குள் சுற்றுலா பயணிகளை கூட அனுமதிக்க கூடாது என்று உயர்நீதி மன்றம் சொல்லியிருப்பதால் இனி காட்டுக்குள் படம் எடுப்பது வெறும் கனவாகவே இருக்கும். இனி சினிமாகாரர்களுக்கு பரங்கிமலையும், திரிசூலம் மலையுமே உதவும்.