சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! | சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி! | ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா! | ஈரவெயில் ஆனது திருவாசகம்! | பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்! | ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! | உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா |
வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த வருடம் பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை மணந்தார். இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ளன.
திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்திருப்பது பற்றி மம்தாமோகன்தாஸ் அளித்துள்ள பேட்டியில், திருமணத்துக்கு பின் சினிமாவில் நான் அதிக ஆர்வம் காட்டுவதாக பேசுகின்றனர். கல்யாணம் ஆன பின் நடிப்பது தவறல்ல. திருமணத்துக்கு பிறகு நடிக்கக் கூடாது என்று இல்லை. நான் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்தே நடிக்கிறேன். வருடத்துக்கு மூன்று படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜவான் ஆப் வெற்றி மல படத்திலும் திலீப்புடன் மைபாஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.