ஷாம் நடிக்கும் கோடை விடுமுறை
நடிகர் ஷாம் நடிக்கும் புதிய படத்திற்கு கோடை விடுமுறை என்று பெயரிட்டுள்ளனர். இதயம், உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் கதிர், கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் ஷாம் ஜோடியாக மும்பையை சேர்ந்த 2 முன்னணி நாயகிகள் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நாசர், அஸ்வின் ராஜா நடிக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகம் ஆகிறார்.
சவுண்ட் லைட் ஸ்டூடியோஸ் மற்றும் மீடியா இன்பினைட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. வெளிப்புற படப்பிடிப்பு பெங்களூர், மைசூர், கேரள பகுதிகளில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகளை ஆஸ்திரேலியா, சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
படத்தை பற்றி டைரக்டர் கதிர் கூறுகையில், இதற்கு முன்பு நான் இயக்கிய படங்களைப்போல் இந்த படமும் அழகான காதல் கதை. முற்றிலும் வித்தியாசமான பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் கோடை விடுமுறை முக்கியமான நாட்களாகும். அந்த நேரத்தில் நிகழும் சம்பவங்களை, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கிறேன், என்றார்.