Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஸ்ரீதேவி படத்தில் அஜித்...!

28 ஜூலை, 2012 - 11:52 IST
எழுத்தின் அளவு:

ஸ்ரீதேவி நடித்து வரும் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில், ‌கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவை கலக்கிய ஸ்ரீதேவி, பின்னர் இந்தி திரையுலகிலும் கால்பதித்து, அங்கும் முத்திரை பதித்தார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்ட ஸ்ரீதேவி, இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடிக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா செல்லும் ஸ்ரீதேவி, அங்கு மொழி பிரச்னையால், ஆங்கில மொழியை திக்கி திணறி பேசி அங்குள்ளவர்களால் கிண்டல்களுக்கு ஆளாகிறார். பின்னர் அதை சவாலாக ஏற்று முறைப்படி ஆங்கிலத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இதுவே இப்படத்தின் கதை. கவுரி ஷிண்டே இயக்கும் இப்படத்தை பால்கி தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டனர் படக்குழுவினர். ஸ்ரீதேவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இப்படத்தை தென்னிந்தியாவிலும் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். ஏற்கனவே இந்தி இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் ஒரு முக்கிய கேரக்டரில் தோன்றவுள்ளார். அதேப்போல் தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாக இருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் நடித்த கேரக்டரில் டாப் ஸ்டார் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி ஆரம்பத்தில் அமிதாப் ரோலில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியுடன் ஸ்ரீதேவி நிறைய படங்களில் நடித்துள்ளதாக அவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவார் என்பது படக்குழுவின் நம்பிக்கை. ஆனால் ரஜினியோ மறுத்துவிட்டாராம்.

இந்நிலையில் ரஜினிக்கு பதில் அந்த கேரக்டரில் இப்போது அஜித்தை நடிக்க பேச்சுவார்ததை நடத்தி வருகி்ன்றனர். இதனை படக்குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். டாப்ஸ்டார் ஒருவ‌ரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றும், இதற்கான அறிவிப்பு முறைப்படி ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

m.abdul kader - salem,இந்தியா
11 ஆக, 2012 - 07:30 Report Abuse
 m.abdul kader athu unmaithan
Rate this:
prabakaran - dindugul,இந்தியா
09 ஆக, 2012 - 13:14 Report Abuse
 prabakaran தல நீ தான் அடுத்த சிவாஜி ,கமல் மற்றும் அடுத்த james bond 007 இன் வேர்ல்ட்
Rate this:
அகில் - coimbatore,இந்தியா
08 ஆக, 2012 - 10:51 Report Abuse
 அகில் ரவுடி ரதோர் ல விஜய் டான்ஸ் இப்போ ஸ்ரீதேவி ஹிந்தி படத்துல அஜித் ஆ போங்க பாஸ் போங்க இனி தமிழ் நாடுல எல்லோரும் நிம்மதியா படம் பாக்கலாம்
Rate this:
செய்யது சுலைமான் - KUANTAN,மலேஷியா
06 ஆக, 2012 - 12:47 Report Abuse
 செய்யது  சுலைமான் நீங்கள் ஹீரோ (ஹீரோக்களுக்கு) முன் உதாரணம் ,எது செய்தாலும் சூப்பர் .....,
Rate this:
jothiraj - southpanavadali,இந்தியா
05 ஆக, 2012 - 14:55 Report Abuse
 jothiraj தல தமிழர்களுக்கு நீ ஒரு உத்வேகம்.ஆட்டத்த நீ ஆரம்பி நாங்க முடிக்கிறோம்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in